NSWF அனைத்துப்பிரிவு நிர்வாகிகளுக்கும் முக்கிய அறிவிப்பு:
நமது அமைப்பில் பொறுப்புகளில் (பதவிகளில்) இருக்கும் சிலர் இதுவரை எவ்வித இயக்க பணிகளிலும் ஈடுபடாமல், வெறுமனே பதவிகளில் மட்டும் இருந்து கொண்டு இயக்கத்தின் வளர்ச்சியினை பற்றி கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது. மேலும் இவர்களை முன்னுதாரணமாக மற்ற நிர்வாகிகளும் எடுத்துக்கொண்டால் இயக்கத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் இயக்கத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மேற்கண்டவர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகை வரை கால அவகாசம் கொடுப்பது என்றும், அதற்க்குள் மேற்கண்டவர்கள் தங்கள் பதவிற்க்கு தாங்கள் தகுதியானவர்கள்தான் என்பதை நிருபிக்கவில்லையெனில், அவர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி தகுதிநீக்கம் செய்யப்பட்டு சாதாரண உறுப்பினராக மாற்றப்படுவார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றோம்.
- தலைவர்