நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் மற்றும் தாய்மை அறக்கட்டளை இணைந்து நடத்திய, NSWF அமைப்பின் 6 ஆம் வருட துவக்க விழாவை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் கடந்த 24.07.2016 அன்று நடைபெற்றது.
இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நமது முகாமில் கலந்து கொண்ட ஏழை முதியவர்கள் எட்டு பேர் மேல் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு கண்பார்வை பெற்றனர்.
இம்முகாமிற்கு சென்னை மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்ப்பாடு செய்திருந்தினர். இறுதியாக நமது தலைவர் இம்முகாமில் நம்முடன் கலந்துகொண்ட தாய்மை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறினார்.