Thursday, January 26, 2017

சந்திப்பு

[1/26, 8:34 PM] இடம்: விழுப்புரம், நாள் : 26.01.2017
[1/26, 8:34 PM] எம்.ஜி.ஆர். அம்மா தீபா ஆதரவாளர்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் MGR வல்லரசு இன்று (26.01.2017) விழுப்புரத்தில் NSWF தலைவர் சிவனேசன்    அவர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்..

Wednesday, January 25, 2017

அறிவிப்பு

NSWF கெண்டியங்குப்பம் கிளையை சேர்ந்த ஆனந்த் அமைப்பின் பெயரை தவராக பயன்படுத்தியதற்காக NSWF அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக இன்று (25.01.2017) முதல் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் உறுப்பினர்கள் யாரும் அமைப்பு சார்பாக எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

Friday, January 20, 2017

அரசு விடுதி மாணவிகள் கோரிக்கை நிறைவேற்றம்

அன்னியூர் அரசு மாணவியர் விடுதி மாணவிகள், நமது தலைவர் மேன்மைமிகு சிவநேசன் அவர்களிடம் தங்களது விடுதி வார்டன் தங்களுக்கு தகுந்த பாதுகாப்போ, உணவோ வழங்குவதில்லை, விடுதியில் தங்குவதே இல்லை என பல புகார்களுடன் மனு செய்ததைத் தொடர்ந்து, நமது தலைவர் திரு சிவநேசன் அவர்கள் நேரடியாக எடுத்த நடவடிக்கையின் காரணமாக, அன்னியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி வார்டன், சமையலர் இருவரும் இரண்டே நாட்களில் மாற்றப்பட்டுள்ளனர்...

- வழக்கறிஞர் பவாணி, பொதுச்செயலாளர், NSWF

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு அழைப்பு

ஆங்காங்கே நடைபெரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்தும் NSWF உறுப்பினர்களும் அவரவர் பகுதியில் பங்கேற்க வேண்டும்... போராட்டத்தை முன்னின்று வழிநடத்துபவர்களுக்கு நமது NSWF-ல் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். போராட்ட பங்கேற்பு புகைப்படங்களை அனுப்புக...
--- தலைவர்

Saturday, January 14, 2017

பொங்கல் வாழ்த்துக்கள்

💐🌾🌾🙏🏼

                    உங்களுக்கும்

                         உங்கள்
      
             குடும்பத்தினருக்கும்

                  நமது NSWF -ன்

                         இனிய

தைத்திருநாள் மற்றும் பொங்கல்

               நல்வாழ்த்துக்கள்🙏🏼💐🌾🌾

Tuesday, January 3, 2017

NSWF நிர்வாகிகள் சந்திப்பு

இன்று (3.1.2017) விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு NSWF உறுப்பினர் திருமதி தேவியின் சொத்துக்களை சமுக விரோதிகளிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்த நமது தலைவர் உயர்திரு சிவனேசன் அவர்கள் வந்திருந்தபோது, தலைவரை காணவந்த அந்த பகுதி NSWF நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

Monday, January 2, 2017

சென்னை மண்டல NSWF கூட்டம்

சென்னை மண்டல NSWF நிர்வாகிகள் கூட்டம் கடந்த 25.12.2016 அன்று, சென்னை கீழ்கட்டளையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் NSWF நிறுவனர் மற்றும் தலைவர்  திரு. சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதி பவானி,  NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு தேசிய செயலாளர் திரு. ஜெயக்குமார், NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு சென்னை மண்டல அமைப்பாளர் திரு குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Sunday, January 1, 2017

R.T.I act for Anniyur Toilet Matter

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005,  
For Anniyur Toilet Matters

Appeal


மேற்கண்ட நமது மேல்முறையீட்டு மனுவிற்கு கீழ்கண்ட பதில்கள் இன்று பொது தகவல் அலுவலர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி . ஊ), ஊராட்சி ஒன்றியம், காணை. மூலம் வழங்க பட்டுள்ளது. மேற்கண்ட பதில்கள் முழுமையின்றி தகவல் மறுக்கும் வகையில் பதில்கள் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு முதல் தகவல் கோரும் மனுவில் கொடுத்திருந்த 2015-2016 தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இரண்டு முறை ஒரே நபருக்கு கொடுக்கப்பட்டதை மேல்முறையீட்டு மனுவில் நாம் சுட்டிக்காட்டியதால் தற்பொழுது நமக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் மேற்கண்ட இரண்டு நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு வெவ்வேறு பட்டியல் வழங்கி நம்மை குழப்பி தப்பிக்க நினைப்பதுபோல்  உள்ளது இந்த பதில். இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் பிரிவு 18(1)(d) ன் படி இழப்பீடு மற்றும் பொய்யான தகவல் வழங்கியவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றம். 

இது இத்துடன் முடியவில்லை முழுமையாக விலாசத்துடன் வழங்காமல் வெறும் பெயரையும் தந்தை பெயரைமும் மட்டும் வழங்கி பல்லாயிரம் மக்கள் வாழும் ஊரில் கண்டுபிடிக்காமல் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு தகவல் மறுப்பதாக நாம் நினைப்பதால் அடுத்து மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு பிரிவு 19(3) ன் படி செய்யப்படும். தேவை ஏற்பட்டால் புகார், போராட்டம், நீதிமன்ற வழக்கு என்று அடுத்த கட்டத்தை எட்டுவது தொடர்பாகவும் ஆலோசனையில் உள்ளோம் என்பதை நமது NSWF தோழர்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.







இனிய பத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோன்.வாழ்க வளமுடன்.

# ர.சிவநேசன், நிறுவனர் & தலைவர்
NATIONAL SOCIAL WELFARE FOUNDATION (NSWF)