Wednesday, February 22, 2017

நமது கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் நகராட்சி


கடந்த 14.02.2017 அன்று விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் உள்ளிட்ட தொல்லைகள் தருவதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு கொடுத்திருந்தோம்.....
நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதாரப்பணிகளை விழுப்புரம் நகராட்சி தொடங்கியுள்ளது. நமது கோரிக்கைக்கு மதிப்பளித்து மேற்கண்ட பணிகளை தொடங்கிய விழுப்புரம் நகராட்சிக்கு நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF) சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, February 8, 2017

மிக மிக அவசரம்

மிக மிக அவசரம்:

அகிலன் என்கிற இளைஞர்    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்படுகிறார். அவருக்கு அன்புள்ளம் படைத்த பெரியோர்கள் உதவுமாறு எங்களின் NSWF இயக்கத்தின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
--- ர.சிவநேசன், தலைவர், NSWF

Name: A.Agilan

AC.No.04750110019764
UCO bank, Nellikuppam Kuppam Branch.
IFSC code: UCBA0000475

தொடர்புக்கு,
8667070895
7449257128

மருத்துவமனை விலாசம்:
K.K.R. Hospital
7, மந்தவெளி தெரு,
மந்தவெளி மார்க்கெட் அருகில்,
மயிலாப்பூர்.

Sunday, February 5, 2017

பாராட்டுக்கள்

சென்னை கிழ்கட்டளையில் கடந்த 03.02.017 அன்று ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் NSWF கார்திக், ஆனந்த், சிரிதரன் ஆகியோருக்கு நமது தலைவர் பாராட்டுக்களை தெரிவித்தார்

Saturday, February 4, 2017

வாழ்த்துக்கள்

நமது NSWF அமைப்பின் கவிஞர் ந.சக்திவேல் அவர்களின் "கதிரவனின்... அன்புத்தூண் (காதல் கவிதை) வெளியீட்டு விழாவில் (03.02.2017) நமது அமைப்பின் தலைவர் உயர்திரு சிவனேசன் அவர்கள் கலந்துகொண்டு கவிஞர் ந.சக்திவேல் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்...

நிர்வாகி நியமனம்

இரா. திருவரைச்செல்வன் அவர்கள்  NSWF - SOCIAL DEVELOPMENT DIVISION விழுப்புரம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...
நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தகுந்த ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

- நிறுவனர் & தலைவர், NSWF

Wednesday, February 1, 2017