Sunday, April 30, 2017

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல தலைமை அமைப்பாளராக   கீழ்கட்டளையை சேர்ந்த  திரு குமார் த/பெ வெங்கடாசலம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்                 
       

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல  துணை அமைப்பாளராக  பெரும்பாக்கத்தை  சேர்ந்த  திரு ஆனந்த் த/பெ ஆறுமுகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் சென்னை மண்டல துணை செயலாளராக குத்தாலத்தை சேர்ந்த கார்த்திக் த/பெ விஜயகுமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளராக நன்மங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் த/பெ அபிமானன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


விழுப்புரம் மாவட்டம் NSWF - மனித உரிமை பிரிவின், காணை கிளை செயலாளராக திரு இளையராஜா த/பெ தாண்டவராயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  

                      


காணை B.D.O. & B.D.O. அலுவலக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு

மனு கொடுத்து 25 நாட்களுக்குமேல் ஆகியும் மனு மீது நடவடிக்கை எடுக்காத காணை B.D.O. & B.D.O. அலுவலக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு



Thursday, April 27, 2017

கடலூர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகி அறிவிப்பு


NSWF - மனித உரிமைகள் பிரிவுவின் கடலூர் மாவட்ட துணை செயலாளராக பாரதிதாசன் த/பெ பாண்டியன் (பச்சரா பாளையம் கிராமம்) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tuesday, April 25, 2017

அன்னியூர் கார்ப்பரேசன் வங்கி மேலாளருக்கு நன்றி!

நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று அன்னியூரைச் சேர்ந்த தனது சொந்த தொழிலில் சாதிக்கத் துடிக்கும் ஏழை இளைஞருக்கு தாட்கோ லோன் வழங்கிய அன்னியூர் கார்ப்பரேசன் வங்கி மேலாளருக்கு நன்றி!

நன்றி!! நன்றி!!!

Wednesday, April 19, 2017

சித்தேரி பர்குணன் அமைப்புக்கு நன்றி கடிதம்






வளவனுர் கனகசபை கடையுள்ள இடப்பத்திரம் அளவு மோசடி பிரச்னை

நமது NSWF அமைப்பை சேர்ந்த வளவனூர் கனகசபை என்பவர் வளவனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண்: 564/1965 ல் அலுவலக ஊழியர்களின் துணையோடு மோசடியாக அளவுகளை 10.1/2 க்கு 24 என்பதை 40.1/2 க்கு 74 என்று சட்டவிரோதமாக திருத்தி அதிகாரிகளின் துணையுடன் மோசடியாக பட்டா பெற்று தன்னை வெளியேற்றி தனது கடையை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும்,இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அமைப்பு தனக்கு உதவ வேன்டும் என்று நமது NSWF அமைப்பின் உதவியை நாடினார். அவரின் கோரிக்கையை ஏற்று அமைப்பு மேற்கொண்ட பல்வேறு சட்ட நடடிக்கைகள் காரணமாக கடந்த 17.04.2017 அன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் வளவனூர் சார்பதிவாளர் அலுவலகத்தால் தவறுகள் நடக்காதது போன்று திருத்தங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய அளவுகள் கொண்ட 10.1/2 க்கு 24 என்ற அளவுள்ள 564/1965 ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடாவிட்டாலும், குறைந்தபட்சம் தவறுகள் சரிசெய்யப்பட்டு நம்மை நாடி வந்தவரின் வாழ்வாதாரம் நமது அமைப்பின் நடவடிக்கையால் காக்கப்பட்டது.


ர.சிவனேசன்,
நிறுவனர் & தலைவர்
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)









Monday, April 10, 2017

புதியதாக நமது NSWF அமைப்பில் உறுப்பினராக இணைய விரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு

உறுப்பினர் கட்டணம், நன்கொடை (Donation) என்று யாரவது உங்களிடம் கேட்டால் அதனை பணமாக கொடுக்காமல் அமைப்பின் வங்கி கணக்கில் செலுத்தி அந்த ரசீதையோ அல்லது பரிவர்த்தனை எண்ணையோ( Transaction Number) அல்லது அமைப்பின் பெயரில் காசோலையாகவோ ( Cheque ) மட்டும் கொடுக்கவும். அப்படி கொடுக்கப்படும் பணம் மட்டுமே National Social Welfare Foundation அமைப்பு ஏற்றுக்கொள்ளும். National Social Welfare Foundation அமைப்பின் நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் அல்லது  யாரிடமாவது பணம் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அமைப்பு அந்த பணத்திற்கு பொறுப்பேற்காது என்று தெரிவித்து கொள்கின்றோம். நமது அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க 10 ரூபாய் கொடுத்தாலும் அதனை அமைப்பின் வங்கி கணக்கில் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றோம். விண்ணப்ப கட்டணங்கள் பணமாக நான் உள்ளிட்ட யாரிடம் கொடுத்தாலும் அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றேன். மேற்கண்ட நிபந்தனைகள் 01.04.2017 முதல் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர். 


ர. சிவநேசன்,
நிறுவனர் & தலைவர்



Refer Rules and Regulations for Membership
22) For Donations:
If anybody wishes to donate for the development of the NSWF organization, can donate in any one of the following way only. We strictly advise all, not to give cash to anyone. The organization does not own the responsibility for the cash given to anyone.
Use Bank Name: HDFC Bank, Branch Name: VILLUPURAM, Account Number: 10751450000044, Account Name: NATIONAL SOCIAL WELFARE FOUNDATION, IFSC Code: HDFC0001075
Donate By Cheque in the name of "NATIONAL SOCIAL WELFARE FOUNDATION"
Donate By Demand Draft in the favour of "NATIONAL SOCIAL WELFARE FOUNDATION" payable at Villupuram.

Rules and Regulations for membership Updated 01.04.2017

அனைத்து NSWF (National Social Welfare Foundation) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு,
புதிய உறுப்பினர் சேர்க்கை அல்லது பழைய உறுப்பினர் புதுப்பித்தலின் போது உறுப்பினர் அட்டைக்கான செலவுத்தொகை / கட்டணம் வசூலிக்கும் போது பணமாக வாங்க கூடாது. நமது அமைப்பின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திய ரசீதை அல்லது அமைப்பின் பெயரில் காசோலை மட்டுமே வாங்கி அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேற்கண்ட நிபந்தனை நான் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் பொருந்தும். 100 ரூபாய் நன்கொடை/ கட்டணம் என்றாலும் அதனை அமைப்பின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும். மீறும் உறுப்பினர் / நிர்வாகிகள் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாகநிராகரிக்கப்படும். மேற்கண்ட நிபந்தனை 01.04.2017 முதல் அமலுக்கு வருகின்றது....

அமைப்பின் வரவு செலவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதனால் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ர.சிவநேசன், 
  நிறுவனர் & தலைவர், NSWF



Refer Rules and Regulations for Membership
22) For Donations:
If anybody wishes to donate for the development of the NSWF organization, can donate in any one of the following way only. We strictly advise all, not to give cash to anyone. The organization does not own the responsibility for the cash given to anyone.
Use Bank Name: HDFC Bank, Branch Name: VILLUPURAM, Account Number: 10751450000044, Account Name: NATIONAL SOCIAL WELFARE FOUNDATION, IFSC Code: HDFC0001075
Donate By Cheque in the name of "NATIONAL SOCIAL WELFARE FOUNDATION"
Donate By Demand Draft in the favour of "NATIONAL SOCIAL WELFARE FOUNDATION" payable at Villupuram.

Sunday, April 2, 2017

விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை

நன்றி!  நன்றி!! நன்றி!!!

விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க







வேண்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பின் சார்பாக மனு செய்திருந்தோம். மனுவை ஏற்று துரித நடவடிக்கையில், துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரத்தை சரிசெய்த TNEB JE அவர்களுக்கும், நேரில் பார்வையிட்டு தக்க நடவடிக்கையை துவங்கிய காணை ஊராட்சி ஒன்றிய BDO அவர்களுக்கும், இவர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும் நமது NSWF சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்...
------------
NSWF அமைப்பின் கோரிக்கைக்கு முன்னர் ஏழுசெம்பொன் கிராம தண்ணீர் பிரச்சனை







தண்ணிர் பிரச்சினையை தீர்க்க NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று தற்பொமுது நடைபெற்று வரும் பணிகள்