Sunday, May 28, 2017
அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைவரின் வேண்டுகோள் !!!
அன்புக்குரிய நிர்வாகிகளே மற்றும் உறுப்பினர் தோழர்களே. நமது அமைப்பை சிவநேசனாகிய நான் ஒருவன் மட்டுமே பலப்படுத்திவிட முடியாது. இரவு 2.51க்கு தூக்க கலக்கத்துடன் இந்த எனது மன குமுறலை உங்களிடம் வெளிப்படுத்துகின்றேன். நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகிய உங்கள் அனைவரின் ஒத்துழைய்ப்பு, உண்மையான அக்கறை, நமது அமைப்பை வளர்க்க வேண்டும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வெறியும், பற்றும் உங்கள் அனைவரிடமும் இருந்தால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால் உங்களில் எந்தனை பேர் அதனை செய்தீர்கள்??? NSWF அடையாள அட்டையை மக்களுக்கு நன்மை செய்ய பயன்படியுத்தாமல், அரசு அதிகாரிகளை மிரட்டவே பயன்படுத்துகின்றீர்கள். உங்களில் எத்தனை பேர் இதுவரை குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது சேர்த்துளீர்கள்? என்று சொல்ல முடியுமா? உங்களின் பதவியை ரெனீவல் செய்யும் போது மிகவும் வெட்கப்படுகிறேன். கடந்த முறை உங்களுக்கு பதவியை போடும்போது பார்த்த நான் இப்போதுதான் ரெனீவலில் உங்கள் முகத்தை காண்கின்றேன். நீங்கள் அடையாள அட்டையை உங்களின் பலத்திற்க்காக மட்டுமே பயன்படுத்துகின்றீர்களே தவிர நமது அமைப்பை பலப்படுத்த ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. சென்னை அணியை எடுத்துக்கொண்டால் கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை பல நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தும் குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களை கூட சேர்க்கவில்லை . அப்படியே உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அனுப்பினாலும் அதற்க்கான கட்டணத்தை இதுவரை முழுதாகவோ அல்லது மொத்தமானவவோ அனுப்பியதே இல்லை. மேலும் பல மாதங்கள் உறுப்பினர் செக்கை விண்ணப்பங்களை தங்களுடனே வைத்திருந்து விட்டு. உறுப்பினர்கள் கட்டணம் செலுத்தியும், கட்டணம் எதுவும் அனுப்பாமல் அமைப்பை நிர்பந்த படுத்தி இலவசமாக அடையாள அட்டை பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நேரடியாக வங்கியின் கணக்கு எண்ணில் பணத்தை செலுத்த சொன்னால், உறுப்பினர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தி விட்டனர். . இதனால் நமது அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக நிதி பற்றா குறையிலேயே உள்ளது. உங்களுக்கு பதவி அளிக்க பரிந்துரைத்த முக்கிய நிர்வாகிகளும் தமது கடமையை செய்வதில்லை , உங்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க அவர்களுக்கு நேரம் இல்லை. அப்புறம் எப்படி நமது அமைப்பு வளரும்??? சென்ற ஆண்டு சென்னை நிவாகிகள் நடத்திய மருத்துவ முகாமை தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. ஒரு நிர்வாகிகள் கூட்டம் கூட இதுவரை நடத்தி எனக்கு அறிக்கை அனுப்பவில்லை. கேட்டால் ஈகோ பிரச்சனையை முன்வைக்கின்றீர்கள். உங்களை நம்பினால் நமது அமைப்பை வளர்க்க இன்னும் பல யுகங்கள் தேவைப்படலாம். எனவே தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய நிர்வாகிகளும், மீண்டும் ரெனீவல் செய்துள்ள பழைய நிவாகிகளும் 2 மாதங்களுக்குள் தங்களின் திறமையை நிரூபிக்கும் வண்ணம் புதிய உறுப்பினர் சேர்க்கை, உங்கள் பகுதியில் கிளை கூட்டம் நடத்தி உங்கள் தகுதியை நிரூபிக்கவேண்டும். இல்லையெனில் கட்டை வண்டியில் சவாரி செய்ய நமது அமைப்பு தயாராக இல்லை. எனவே உங்களை உறுப்பினர்களாக்கிவிட்டு புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்று தெரிவித்துக்கொளகிறேன். உங்களுக்கு கட்டளையிட நான் உங்களுக்கு பணம் கொடுத்து வேலைக்காரர்களாக வைத்தில்லை.NSWF அமைப்பின் தலைவர் என்ற முறையில் எனது வேண்டுகோளை அன்பு வேண்டுகோளாக ஏற்று அமைப்பை பலப்படுத்த வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இவண்,
ர. சிவநேசன்,
நிறுவனர் தலைவர் NSWF
National Social Welfare Foundation
இவண்,
ர. சிவநேசன்,
நிறுவனர் தலைவர் NSWF
National Social Welfare Foundation
Labels:
வேண்டுகோள்கள்
Saturday, May 27, 2017
Friday, May 26, 2017
Thursday, May 25, 2017
Wednesday, May 24, 2017
O.A.P., NREGA பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய அன்னியூர் கார்ப்பரேஷன் வங்கிக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் கிராமத்திலுள்ள கார்பொரேஷன் வங்கியை சார்ந்து அன்னியூரை சுற்றி பல கிராம மக்கள் உள்ளனர். இவர்களின் ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]), அரசாங்க நலத்திட்ட உதவிகள் ஆகியவைகள் இந்த வங்கியின் மூலமாகவே பல கிராம மக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் நம்மை சந்தித்த பல கிராம முதியோர்கள் மற்றும் 100 நாள் வேலை செய்யவோர் பலர், "தங்களுக்கு வழங்கப்படும் மேற்கண்ட திட்டங்களுக்கான பணம் முழுமையாக அல்லது சுத்தமாக வழங்கப்படுவது இல்லை. மேற்கண்ட திட்டங்களுக்கான பணத்தை வழங்க மேற்கண்ட அன்னியூர் கார்ப்பரேஷன் வங்கி தனியார்களை பணியமர்த்தி உள்ளது. அவர்கள் சரியாக பணம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்றும், தங்களின் கைரேகையை பெற்று தங்களின் வாங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடுகிறார்கள் என்றும் சந்தேகம் உள்ளதாகவும், மேலும் வயது முதிர்ந்த ஏழைகளான தங்களை அவர்கள் மரியாதையுடன் நடத்தாமல் ஏளனம் செய்து அவமான படுத்துவதாகவும், பல மாதங்களாக பணம் வரவில்லை என்று வங்கியில் கேட்டால் எங்கள் பகுதியிலுள்ள தாங்கள் பணியமர்த்தியுள்ள தனியார்கள் சொல்வதை ஒழுங்காக கேட்டு நடந்துகொள்ளுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு எந்த பணமும் வராமல் செய்து விடுவோம் என்று மிரட்டு கிறார்கள். இதனால் வயதான காலத்தில் செலவுக்கு கூட பணமின்றி தவிப்பதாக பல முதியோர் கூறியது பல நாட்களாக நமது மனதை நெருடிக்கொண்டே இருந்தது."
இந்நிலையில் இதே பிரச்னையுடன் நம்மை அணுகிய நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பின் சித்தேரி கிளை அமைப்பாளர் திரு ஜோசப் த/பெ பெரியநாயகம் மற்றும் சித்தேரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் "தங்களுக்கு தனியார் வேண்டாம், எங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு ATM கார்டு வாங்கி கொடுத்தது விடுங்கள் நாங்கள் அனைத்து ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]), அரசாங்க நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் வங்கியிலேயே பெற்றுக்கொள்கின்றோம். ATM இருப்பதால் தங்களால் வாக்கிக்கு சிரமம் இல்லை. மேலும் தனியார்கள் தலையீடும் இல்லாது எங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். எங்களுக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது எடுத்துக்கொள்வோம். எனவே ATM பெற்றுத்தாருங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதுவரை இப்பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று குழம்பி வந்த நமக்கு நமது சித்தேரி கிளை நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை பலரின் இப்பிரச்சினைக்கான சிறிதளவேனும் தீர்வாக நமக்கு தோன்றியதால், அனைத்து விதமனான வாங்கி கணக்கும் ATM கார்டு வாங்கி தருவது என்று முடிவெடுத்தோம்.
இந்நிலையில் கடந்த 19.05.2017 அன்று வங்கியை அணுகிய நாம் "அனைவருக்கும் வங்கியிலேயே பணம் கொடுக்கலாமே, ஏன் தனியார்களை பணியமர்த்தி உள்ளீர்கள்" என்று கேட்டதுக்கு வங்கியால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினார்கள். "சரி அப்படியானால் அனைவருக்கும் ATM கார்டு வாழ்குங்கள் அவர்கள் பண்ணத்தை ATM மெஷினில் எடுத்துக்கொள்வார்கள் உங்களுக்கும் பிரச்னை இருக்காது" என்று கூறியதும், நமது கோரிக்கையை நிராகரித்த மேற்கண்ட வங்கியின் அலுவலர் தினேஷ் " 500 ரூபாய் செலுத்து சேர்ந்துகொள்ளும் Savings Bank (SB) அக்கௌண்டுக்கு மட்டுமே ஏ.டி,எம். கார்டு வழங்குவோம் மற்ற அக்கௌண்டுகளுக்கு இல்லை என்றும் தவறான தகவலை வங்கியின் மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களின் அருகில் இருந்துகொண்டே கூறினார். இதனால் அதிர்ப்தியடைந்த நாம் இது Reserve Bank of India (RBI) விதியா என்று நாம் வினவியத்துக்கு ஆம் என்று கிராமத்திலுள்ளவர்களுக்கு என்ன தெரியப்போகிறது என்ற எண்ணத்தில் பதிலுரைத்தார்". இதனால் நாம் கார்பொரேஷன் வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். "அவர்கள் தாங்கள் அனைத்து விதமான தங்கள் வங்கி கணக்கிற்கும் ATM கொடுப்பது கட்டாயம், நீங்கள் திருச்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று மண்டல வங்கி தொடர்பு எண்ணனான 0431-2743600 என்ற என்னை கொடுத்தனர்".
பின்னர் நம்மையை தொடர்புகொண்ட திருச்சி மண்டல அலுவலர் திரு கிசோர் அவர்கள் முதலில் ATM இல்லை என்று மறுத்து பின்னர் தலைமை அலுவலகம் அனைவருக்கும், அனைத்து கணக்கிற்கும் ATM கொடுப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர் என்று கூறியதுடன், அன்னியூர் வங்கி அலுவலர் தினேஷிடம் நமது செல்பேசியை கொடுக்குமாறு கூறினார். இருவரும் பேசியபின், அன்னியூர் கார்பொரேஷன் வங்கி அலுவலர் திரு தினேஷும் ஏதோ பேசியபின் நமது அன்பிற்குரிய வங்கி மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களும் திரு தினேஷுடன் பேசினார். பின்னர் நம்மை அழைத்த வங்கி மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் நீங்கள் கோரும் அனைத்து வங்கி கணக்கிற்கும் ATM தருகின்றோம் என்று சம்மதம் தெரிவித்தார். மகிழிச்சியடைந்த நாம் அவருக்கு நன்றி தெரிவித்தோம். பின்னர் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். "சார் நான் சிவநேசன் NSWF அம்மைப்பின் தலைவர், ஏற்கனவே தங்களை ஒரு ஏழை இளைஞனின் தொழில் வளர்ச்சிக்கு தாட்கோ லோன் சம்பந்தமாக தங்களை அணுகி இருக்கின்றேன். தாங்களும் அதனை அவருக்கு கொடுத்து உதவி இருக்கின்றீர்கள் அதற்கும் மிக்க நன்றி" என்று கூறினேன். அதற்க்கு "ஆமாம் சார் சிவநேசனாலே எல்லாருக்கும் தலைவலிதான்" என்று சிரித்துக்கொன்டே கூறினார்.
குறிப்பு: மக்களே உங்களுக்கு தனியார்கள் உங்களின் ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]) ஆகியவற்றிக்கு கொடுக்கும் பணத்தின் மீது சந்தேகமும், அவர்கள் உங்களை நடத்தும் விதம் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கு எண்ணிற்கு ATM கார்டு பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகமும் வராது, உங்கள் பணமும் பத்திரமாக இருக்கும். நீங்கள் வேண்டும் பொழுது உங்கள் பணத்தை வங்கியின் ATM -இல் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் பிரச்சனைக்கு சிறிதளவு தீர்வு தரும் என்று நான் நம்புகின்றேன். மேலும் சில பிரச்சனைகளான, "வேலை செய்தும் 100 நாள் வேலை திட்ட பணம் வரவில்லை, தகுதி இருந்தும் ஓ.எ.பி. பணம் வரவில்லை" ஆகிய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பு மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட இந்த செயல்பாட்டிற்கு உதவிய கார்ப்பரேஷன் வங்கி தலைமை அலுவலகத்திற்கும், மண்டல அலுவலர் திரு கிசோர் அவர்களுக்கும், அன்னியூர் கிளை மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களுக்கும், எனக்கு பக்கபலமாக செயல்பட்ட நமது சித்தேரி கிளை அமைப்பாளர் திரு ஜோசப் அவர்களுக்கும், கிளை செயலாளர் திரு அந்தோணி அவர்களுக்குக்கும், விழுப்புரம்மாவட்ட சமூக மேம்பாடு பிரிவு துணை செயலாளர் திருஇசையாஸ் அவர்களுக்கும், கிளை உறுப்பினர்கள் திரு அந்தோணிசாமி, திரு ஆண்ட்ருஸ் ராஜேந்திரன், திரு சார்லஸ், திரு ராஜு, திரு மகிமைநாதன், திரு செந்தாமரை கலியமூர்த்தி, திருமதி அல்பினா, திரு தியாக சுந்தர், திரு போஸ், திரு குழந்தை இயேசு, திரு ஜான் மெசேன்ரோ, திரு ஆல்பர்ட் பிலீஸ், திரு பிரிட்டோ ஆகியோருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
~சிவநேசன் ரங்கநாதன்,
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF)
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF)
Tuesday, May 23, 2017
Monday, May 15, 2017
Sunday, May 14, 2017
Saturday, May 13, 2017
Friday, May 12, 2017
நீக்கம்!
நமது NSWF அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதால் விழுப்புரம் V.V.C. நகரை சேர்ந்த திரு நாகராஜன் த/பெ பாவாடை நாயுடு (ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர்) NSWF அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். NSWF அமைப்பின் உறுப்பினர்கள் யாரும் மேற்கண்டவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வளவனுர் கனகசபை கடையுள்ள இடப்பத்திரம் அளவு மோசடி பிரச்னை Part - 2
வளவனுர் கனகசபை கடையுள்ள இடப்பத்திரம் அளவு மோசடி பிரச்னை
Part- 2
விசாரணை முடிவும், நமது விளக்கம் கோரிய மனுவும்
==> முந்தைய தகவல்களுக்கு கிளிக் http://www.nswflegal.com/2017/04/blog-post_19.html
Part- 2
விசாரணை முடிவும், நமது விளக்கம் கோரிய மனுவும்
==> முந்தைய தகவல்களுக்கு கிளிக் http://www.nswflegal.com/2017/04/blog-post_19.html
Thursday, May 11, 2017
Wednesday, May 10, 2017
ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கடந்த 27.03.2017 அன்று மாவட்ட ஆட்சியரிடம் நாம் வைத்த கோரிக்கைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) சார்பாக இன்று (08.05.2017) மீண்டும் மனு
Sunday, May 7, 2017
Saturday, May 6, 2017
Thursday, May 4, 2017
Monday, May 1, 2017
Subscribe to:
Posts (Atom)