Saturday, July 22, 2017

முக்கிய அறிவிப்பு!

நமது NSWF மீது தொடர்ந்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் கண்டறியப்பட்டனர். தட்டிகேட்ட தலைவரை கொல்ல சதி.
நாளை SP யிடம் புகார் மனு. நடவடிக்கை இல்லையெனில் மாபெரும் போராட்டம். அனைத்து NSWF உருப்பினர்களும் நாளை (22.07.2017) காலை 10 மணிக்கு விழுப்புரம் NSWF அலுவலகத்தில் கூட தலைமை உத்தரவு. நம் தலைவனுக்கு தோல் கொடுக்க அனைவரும் திரண்டு வாரீர்..

Friday, July 14, 2017

முக்கிய அறிவிப்பு: கோரிக்கை நிறைவேறியதால் 12.07.2017 அன்று நடைபெற இருந்த NSWF பேரணி ரத்து







விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் to மரக்காணம் செல்லும் சாலையில் வேப்பேரி, சாத்தமங்கலம் அருகே அரசு பள்ளி அருகில் அமைய உள்ள புதிய TASMAC கடையை திறக்காமல் தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் TASMAC மேலாளர் ஆகியோரிடம் NSWF சார்பாக நேற்று 10.07.2017 அன்று மனு அளிக்கப்பட்டது. நமது கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரும், TASMAC மாவட்ட மேலாளரும் "நாம் குறிப்பிட்ட அந்த இடத்தில் TASMAC கடை அமையாது என்று உறுதியளித்தனர்.  அதனைத்தொடர்ந்து நாம் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏற்கனவே இறக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.  இதனால் நமது கோரிக்கை நிறைவேறியதால், கடந்த 12.07.2017 அன்று நமது அமைப்பு சார்பாக சாத்தமங்கலம் முதல் சிறுவாடி வரை நடைபெற இருந்த மாபெரும் கண்டன பேரணி கைவிடப்பட்டது.

Thursday, July 6, 2017

தலைமை அலுவலக ஊழியர் நியமனம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஏழுச்செம்பொன் கிராமத்தை சேர்ந்த திரு ரமணி த/பெ விநாயகமூர்த்தி அவர்கள் நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் தலைமை அலுவலக ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது. அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை இடும் கட்டளைகளை செயல்படுத்த தக்க ஒத்துழைப்பு அளித்து உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 4, 2017

கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அறிவிப்பு !

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த  திரு சையத்பீர் த/பெ ஜானி பாஷா  அவர்கள்   நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.