Wednesday, December 20, 2017

நமது NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று அன்னியூர் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரங்களின் மீதும், ஆலய மதில் சுவர்களின் மீதும் வளர்ந்த மரங்களை வெட்டி சரிசெய்த இந்து அறநிலையத்துறைக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அன்னியூர் கிராம முக்கியஸ்தர்களுக்கும் நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், மீண்டும் கோபுரங்களின் மீது மரங்கள் வளர்ந்து சிதிலமடையாமல் தடுக்க நிரந்த தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! நன்றி!! நன்றி!!!

~ர.சிவனேசன்,
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)




Saturday, December 16, 2017

வாழ்த்துக்கள்!

புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் த/பெ செல்லதுரை அவர்கள் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின் புதுச்சேரி மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடையாள அட்டை வழங்கி தலைவர் அவர்கள் வாழ்த்திய போது போது எடுத்த புகைப்படம்

புதுச்சேரி மாநில துணை செயலாளர் அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் த/பெ செல்லதுரை அவர்கள் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின் புதுச்சேரி மாநில துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.


Friday, December 15, 2017

வண்மையாக கண்டிக்கின்றோம்!

மனு கொடுத்து 6 மாதங்கள் மேலாகியும் கழிவுநீர் கூழாயில் ஏற்பட்ட அடைப்பை,  அடைப்பு எங்குள்ளது என்பதை கூறிப்பிட்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடமும், காணை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் நமது NSWF அமைப்பு சார்பாகவும், பாதிக்கப்பட்டவர் சார்பாகவும் பலமுறை மனு அளித்தும், பலமுறை நேரில் அழைத்து வலியுருத்தியும் இதுவரை கழிவுநீர் கூழாயின் அடைப்பை சரிசெய்ய ஒரு துரும்பைக்கூட அசைக்காத கேவல நிர்வாகம்.

படங்கள்: கழிவுநீர் வீட்டிற்குள் வழிந்து  வாயிற்படி வழியே உள்ளிருந்து வெளியேரும் அவலமும், ஒரு குடும்பத்தின்  வாழ்வாதாரத்தை சீரழித்த வேதனையும்.

இடம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், காணை அகரம் சித்தாமூர் சாலை





மா ளிகைமேடு ராமகிருஷ்ணன் அமைப்பின் உதவி வேண்டி மனு


பல லட்சம் செலவு செய்தும் செயல்படாமல் பாதியிலேயே வேலைகள் நிறுத்தப்பட்டு செயல்படாமல் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் கிணறு

பல லட்சம் செலவு செய்தும் செயல்படாமல் பாதியிலேயே வேலைகள் நிறுத்தப்பட்டு செயல்படாமல் பழுதடைந்து கிடக்கும் குடிநீர் கிணறு. இடம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பெருங்கலம்பூண்டி கிராமம்







Sunday, December 10, 2017

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பெருங்கலம் பூண்டி கிராமம் சம்பந்தமாக RTI




கோரிக்கையை நிறைவேற்றிய காணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

NSWF அமைப்பின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பெருங்கலம் பூண்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த காணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

~ர.சிவனேசன்
நிறுவனர் & தலைவர்
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன்(NSWF)











அமைப்பிற்கு வந்த NSWF நிர்வாகி மீதான புகார் கடிதம்