Monday, July 23, 2018

மக்கள் பணிகள் 16-19.07.2018

[7/19, 11:29 PM] nswflegal: நமது NSWF இயக்கத்தின் மக்கள் பணிகள்:

16/07/2018
காதல் திருமணம் புரிந்த விழுப்புரம் மாவட்டம் அன்னியூரைச் சேர்ந்த பாரதி த/பெ சிவக்கொழுந்து மற்றும் மதுரைப்பாக்கத்தைச் சேர்ந்த சுஷ்மிதா த/பெ தங்கமணி ஆகியோர் இருவீட்டாரின் எதிர்ப்பால் பாதுகாப்புக் கேட்டு NSWF தலைவரிடம் மனு அளித்ததை தொடர்ந்து,  விக்கிரவாண்டி காவல் நிலைய உதவியுடன் இருவீட்டாரும் சமரசம் செய்யப்பட்டு மணமகள் தனது கணவருடன் NSWF நடவடிக்கையால் அனுப்பி வைக்கப்பட்டார்

[7/19, 11:41 PM] nswflegal: 16/07/2018
விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிகுப்பத்தை சேர்ந்த NSWF உறுப்பினர் பழனிவேல் த/பெ ஜெயராமன் தான்   PACL நிருவனத்தில் தனது பிள்ளைகள் வைத்தீஷ் மற்றும் சர்வதா ஆகியோர் பெயரில் பணம் கட்டி ஏமாந்து விட்டதாகவும், அதனை மீட்டு தரும்படியும் NSWF தலைவரிடம் கடலூர் மண்டல துணை அமைப்பாளர் சக்திவேலு உதவியுடன் மனு

[7/19, 11:52 PM] nswflegal: 16/07/2018
விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் வருவாய் ஆய்வாளரிடம் அன்னியூரைச்சேர்ந்த கனகாம்பாள், ஞானாம்பாள், சேது அம்மாள் ஆகியோரின் பட்டா திருத்தம் தொடர்பாகவும், கிருஷ்ணவேணி O.A.P தொடர்பாகவும், ஏழுமலை, செல்வராசு, முருகன், குப்பு ஆகியோரின் பட்டா மாற்றம் தொடர்பாகவும் விரைந்து முடிக்க நமது NSWF சார்பாக வலியுருத்தப்பட்டது.  வருவாய் ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உருதியளித்தார்

[7/20, 12:23 AM] nswflegal: 17/07/2018
இன்றய தேடல் பத்திரிக்கை ஆசிரியர் உதயகுமாருடன் திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதிகளில் NSWF களப்பணி தலைவருடன் நடைபெற்றது
[7/20, 12:45 AM] nswflegal: 18/07/2018
தனது மகள் சுந்தரியின் கல்வி கடனுக்காக விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கார்ப்பரேசன் வங்கியில் மனு அளித்து மறுக்கப்பட்டு, பின்னர் NSWF தலைவரின் தலையீட்டால் விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் மேட்டுத்தெருவை சேர்ந்த உஷா என்பவரின் மனு ஏற்கப்ட்டு, கல்வி கடன் அளிப்பதாக வங்கி மேலாளரால் உறுதியளிக்கப்பட்டது

[7/20, 12:53 AM] nswflegal: 18/07/2018
தனது தந்தையின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு இடத்தை போலி பத்திரம் மூலம் ஆக்கிரமிக்க முயலும் விழுப்புரம் மாவட்டம் சோழம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன்,  தாருநாவுக்கரசு ஆகியோர் மீது அன்னியூரைச்சேர்ந்த ஜெயசுந்தரி வேண்டுகோளின்படி NSWF தலைவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

[7/20, 1:00 AM] nswflegal: 18/07/2018
போலி வாக்குருதிகள் கொடுத்து, பல லட்சங்கள் மோசடி செய்த விழுப்புரம் மாவட்டம் கனக்கன் குப்பத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, முருகன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த பாரதி ஆகியோர் மீது செஞ்சியை அடுத்த மொடையூரைச் சேர்ந்த ஞானவேலுவின் வேண்டுகோளின் படி NSWF தலைவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

[7/20, 1:24 AM] nswflegal: 19/07/2018
பல போலி வாக்குறுதிகள் கொடுத்து, தமிழகம் பொது மக்களுக்கு ஆசையை ஏற்படுத்தி பொது மக்களிடளிடம் பல கோடி சுரண்டி ஏமாற்றி பல அறக்கட்டளைகளின் பெயரால் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு தான் ஒரு கிருத்துவ பாதிரியார் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தொடர்ந்து பண மொசடி செய்து பொது மக்களை ஏமாற்றுவதுடன் தட்டி கேட்பவர்களை அடியாட்களின் மூலம் துன்புருத்தும் போலி பாதிரியார் அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தைச் சேர்ந்த தீமதை மீது நடவடிக்கை எடுத்து தங்களின் ஏமாற்றப்பட்ட பணத்தை மீட்டுதர உதவும்படி பாதிக்கப்பட்டவர்கள் NSWF தலைவரை வேண்டி கேட்டுக்கொண்டதையடுத்து, தலைவர் பாதிக்கப்பட்ட நேமூர், கஞ்சனூர் உள்ளிட்ட பல பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தினார்

Saturday, July 21, 2018

விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.ராஜ கணேஷ் அவர்களுக்கு நன்றி! நன்றி!!

நமது NSWF அமைப்பின்  கோரிக்கையை ஏற்று சலுகையுடன் கூடிய தொழில் கடன் வழங்க உத்தரவிட்ட விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.ராஜ கணேஷ் அவர்களுக்கு NSWF அமைப்பின் சார்பாக நன்றி  நன்றி