Tuesday, November 26, 2024

*நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சிவகாசி உறுப்பினருக்கு உரிய நிவாரணம் சட்டபூர்வமாக பெற்று தரப்பட்டது (நாள்25.11.2024)*

*நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சிவகாசி உறுப்பினருக்கு உரிய நிவாரணம் சட்டபூர்வமாக பெற்று தரப்பட்டது (நாள்25.11.2024)*

கொங்கலாபுரம், சிவகாசி தாலுகாவை சேர்ந்த நமது அமைப்பின் உறுப்பினர் முத்துலட்சுமி (வயது:44) க/பெ முத்துவேல் பாண்டியன் என்பவர் 30.05.2024 அன்று தனது ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி அடித்து மானபங்கம் செய்த  நபர்கள் மீது கொடுத்த புகாரில் தனக்கு சிவகாசி நகர காவல் நிலையத்தில் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு சரியான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டி நமது அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் நேற்று (25.11.2024) தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அமைப்பின் சார்பாக நீதிபதிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது! உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பித்த SC&ST ஆணைய நீதிபதிகளுக்கு தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

Sunday, November 24, 2024

Missing a Good Human!

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,  மாவட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரி அவர்களுக்கும் வணகக்கம்!

 மேற்கண்ட இந்த மருத்துவ சீட்டு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்-ல் உள்ள தனிநபர் நடத்தும் *கிரசன்ட் கிளினிக்* என்ற பெயரில் ஒரு மருத்துவமனை உள்ளது.

30/10/2024 அன்று செய்யூர் பகுதியைச் சார்ந்த ராஜகுரு அவர்களின் மகள் யாத்திகாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அந்தக் குழந்தை யாத்திரிக்காவை பரிசோதனை ஏதும் செய்யாமலேயே இவர்கள் கூறியதை வைத்து அந்த குழந்தைக்கு ஊசி போட்டு அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி மாத்திரையும் வழங்கியுள்ளனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர் ஆனால் இரண்டு நாட்களில் குழந்தை உடல்  நிலைமை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் அந்த மருத்துவரை அணுகி கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை குழந்தை காய்ச்சலால் அப்படி உள்ளது சரியாகிவிடும் என்று அப்போதும் பரிசோதிக்காமல் சில  ஆறுதலான வார்த்தைகளை கூறி அனுப்பி உள்ளனர்.

 ஆனால் குழந்தைக்கு உடல் மிகவும் பாதிக்கப்பட்டதால் குழந்தையின் பெற்றோர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் குழந்தை சிகிச்சை பலன் இல்லாமல் 05/11/2024 அன்று இறந்துவிட்டார்.  அதனை அறிந்ததும் எங்கள் NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கூறியது எங்கள் குழந்தையை முதலில் இந்த மருத்துவரிடம் காட்டியுள்ளோம் இந்த  மருத்துவர் சரியான பரிசோதனை செய்யவும் இல்லை குழந்தையின் நிலைமையை எங்களிடம் கூறவும் இல்லை என்று கூறினார்கள்.

 அவர்களிடம் விசாரணை செய்ததில் முதலில் கிரசென்ட் கிளினிக் மருத்துவமனையில் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறோம்... எனவே ஐயா அவர்கள் குழந்தை யாத்திகாவின்
 இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ள கிரசன்ட் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரையும், யாத்திகா குழந்தையின் பெற்றோர்களையும் முறையாக விசாரணை செய்து மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் நன்றி 🙏

Tuesday, November 19, 2024

போக்குவரத்து துறைக்கு தேசிய சமூக நல அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக கோரிக்கை!

*கடந்த 18/11/2024 திங்கட்கிழமை காலை  11 மணியலவில்  நமது NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வைத்துள்ள கோரிக்கை!*

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுராந்தகம் பணிமனை கிளை மேலாளர் (B.M)  அவர்களிடம் தரப்பட்ட மேற்கண்ட கோரிக்கை மனுவை நேரில் சென்று வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு.வேலு, மாவட்ட துணை பொருளாளர் திரு ஏஜேஸ், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபுராஜ் இவர்களுக்கும் மனுவை பெற்றுக் கொண்டு அதன் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தமிழ்நாடு போக்குவரத்து கழக மதுராந்தகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்! 

*~தலைவர்,தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*

Saturday, November 9, 2024

கோரிக்கை!

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் முக்கிய கோரிக்கை மனு 7/11/2024*

இந்த மனு சென்னை TO திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் மற்றும் தொழுப்பேடு இந்த ஊரில் உள்ள மூன்று வளைவுகளில் 2010தில் இருந்து 2024 வரை  எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது, எத்தனை பேர் இறந்து உள்ளார்கள் என்ற சுற்றறிக்கை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்து உங்களின் சுற்றிருக்கை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கூறியதன் காரணமாக

 இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதிவு தபால் நமது செங்கல்பட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

 இந்த மனுவை அனுப்புவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்த நமது செங்கல்பட்டு மாவட்ட துணை பொருளாளர் திரு ஏஜேஸ் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாகவும் மாவட்ட குழுவின் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏

*NSWF செங்கல்பட்டு மாவட்ட குழு*

Friday, November 8, 2024

கோரிக்கை!

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*

*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கும் கோரிக்கை! (நாள்:05.11.2025)*

விழுப்புரம் மாவட்டம், பள்ளியந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடநாயக்கன் குட்டையில் தான்  (புறம்போக்கு சர்வே எண் :179 ) ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பது மட்டுமல்லாமல் அதன் பின்னே அமைந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கெடார் ஊராட்சி சர்வே எண்: 446/1 தோப்பு புறம்போக்கு வழியாக தான் சென்று விவசாயம் மேற்கொள்ள முடியும். மேலும் கால்நடைகளை அவ்வழியாக தான் கூட்டி சென்று மேற்கண்ட குட்டையில் தண்ணீர் கொடுத்து பராமரிக்க முடியும். மேலும் அறுவடை, விதைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவ்வழியாக சென்று தான் மேற்கொள்ள முடியும். தற்போது விவசாயிகளும் கால்நடைகளும் செல்லும் அந்தப் பாதையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியின் தடுப்பு சுவர் அமைத்து அந்தப் பாதையை தடுப்பதால்  50 ஏக்கர் விவசாய நிலங்களும் கால்நடைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் எனவே இதனை மனதில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மதிப்புமிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களும் இதில் தலையிட்டு விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஒதுக்கி தடுப்பு சுவர் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ...

*ர.சிவனேசன்*
~நிறுவனர் மற்றும் தலைவர் 
தேசிய சமூக நல அமைப்பு (NSWF)

பாராட்டுக்கள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 
*திருமதி.பானுப்பிரியா* வயது 23 கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சைக்காக A+ இரத்தம் வழங்கிய கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பு சகோதரர் 
*திரு. விஷ்ணு*
அவர்கள் 18 வது  முறையாக இரத்தம் தானம் வழங்கிய கொடை வள்ளல்க்கும் அவரது குடும்பத்தாருக்கும் தேசிய சமூக நல அமைப்பு (NSWF) மற்றும் துளிகள் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...👏🏼👏🏼👌🏻👌🏻💐💐🤝🤝

இவர்களுடன் 
*தேசிய சமூக நல அமைப்பின் கடலூர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தில்லை சிவா*  மற்றும்

துளிகள் அறக்கட்டளையின் விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர்
 *திரு.N.S. உமர் உசேன்*...

மீண்டும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !

புதிய உறுப்பினர்களை வரவேற்கிறோம்!

Thursday, November 7, 2024

வாழ்த்துக்கள்!

தமிழக அரசுக்கு கோரிக்கை!

*தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கும் கோரிக்கை! (நாள்:07.11.2025)*

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட விஷக் காய்ச்சல்கள் பரவி வருகிறது ...
இது சம்பந்தமாக எங்களது தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) செய்யூர் வட்டம்,  தேவராஜபுரம் கிளை தலைவர் திரு ராஜகுரு உள்ளிட்ட பொதுமக்கள்  அப்பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை வாய்மொழியாக கோரிக்கை வைத்திருந்தனர்... ஆனால் அதிகாரிகளின் மெத்தனம், அலட்சியம், அதிகாரப் போக்கினால் கடமையை செய்ய தவறியதின் காரணத்தினால் கோரிக்கை விடுத்த பொது மக்களில் ஒருவரான தேசிய சமூக நல அமைப்பின் செய்யூர் வட்டம், தேவராஜபுரம் கிளை ராஜ குரு அவர்களின் 6 வயது மகள் யாத்திகா  கடந்த 05.11.2024 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சுகாதார சீர்கேட்டின் காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா இறந்துவிட்டார் என்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது. புகார் அளித்தும் அதன் மீது சரியான நடவடிக்கை எடுக்காத ஒரு உயிர் போவதற்கு காரணமாக அமைந்த சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து உயிரிழந்த யாத்திகாவின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மேலும் அப்பகுதியில் இனி எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத வகையில் சுகாதார சீர்கேட்டை சரி செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களை காக்க வேண்டும் என்று *தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்* சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்!

Friday, November 1, 2024

சொத்தில் பங்கு வேண்டி - விளக்கம்

*தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பயன்பெற வேண்டி பகிறப்படுகிறது!*


*பூர்வீக சொத்தில் பங்கு உடையவர்கள் யார்? - விரிவான விளக்கம்*      
                    
பூர்வீக சொத்து என்பது ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளாக வந்து கொண்டிருக்கும் சொத்து ஆகும். இது பொதுவாக தந்தை வழி முன்னோர்களிடமிருந்து வாரிசுகளுக்குக் கிடைக்கும். இந்த சொத்தின் மீது யாருக்கு எல்லாம் உரிமை உண்டு என்பது பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

*பூர்வீக சொத்தில் பங்கு உடையவர்கள்:*

*இந்துக்கள்:*
2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி:
*பெண்கள்:* தந்தை வழி சொத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் பங்கு உண்டு.
*மனைவி:* கணவர் இறந்த பின்பு மனைவிக்கும் சொத்தில் பங்கு உண்டு.
*மக்கள்:* தந்தை அல்லது தாய் இறந்த பின்பு மக்களுக்கு சொத்தில் பங்கு உண்டு.
*தாத்தா, பாட்டி:* தாத்தா, பாட்டி சொத்தில் பேரக்குழந்தைகளுக்கும் பங்கு உண்டு.        
                         
*மற்ற மதத்தினர்:*
ஒவ்வொரு மதத்தின் சொத்துரிமை சட்டங்கள் வேறுபடும்.
பொதுவாக, சொத்துரிமை குறித்த விவரங்கள் அந்தந்த மதத்தின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் குடும்ப உடன்படிக்கைகளைப் பொறுத்து இருக்கும்.         
          
*பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்காதவர்கள்:*         

*உயிலில் குறிப்பிடப்படாதவர்கள்:* ஒருவர் தனது சொத்தை குறிப்பிட்ட நபருக்கு உயில் எழுதி வைத்திருந்தால், உயிலில் குறிப்பிடப்படாதவர்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காது.       
                  
*சட்டப்படி தகுதியற்றவர்கள்:* குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போன்ற சட்டப்படி தகுதியற்றவர்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காது.          
               
*பூர்வீக சொத்து பிரச்சினைகள்:*
பாகப்பிரிவினை: பூர்வீக சொத்தில் பங்கு உள்ள அனைவரும் ஒன்று கூடி சொத்தை பாகப்பிரிவினை செய்யலாம். 
                          
*வழக்குகள்:* பாகப்பிரிவினை குறித்து உடன்பாடு இல்லாத நிலையில் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடரலாம்.
                 
*சட்ட ஆலோசனை:* பூர்வீக சொத்து தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் நமது தேசிய சமூகநல அமைப்பின் சட்ட வல்லுநர்களிடம் தங்கள் மாவட்டத்தின் மாவட்ட தலைவரின் வழிகாட்டுதலுடன் சட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.      
                                                 
*முக்கிய குறிப்பு:* பூர்வீக சொத்து தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் சிக்கலானவை மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே, துல்லியமான தகவல்களுக்கு உங்கள் மாவட்ட தலைவர் வழிகாட்டுடன் நமது அமைப்பின் சட்ட வல்லுநரை அணுகவும் ...           

               *அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ....*                                 https://whatsapp.com/channel/0029VakJmLO5Ejxt0SKAE60e/230

மனிதநேய செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள்

*திரு ஜேம்ஸ் ராஜா அவர்களின் மனிதநேய செயல்பாட்டுக்கு வாழ்த்துக்கள். பதிவு: 01.11.2024*

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் கண்டமங்கலம் பகுதியில் அடிபட்டு உயிருக்கு போராடிய ரமேஷ் மற்றும் விக்னேஷ் என்ற இரு நபர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்கள் உளில் பிழைக்க உதவிய *தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) தமிழ்நாடு பாண்டிச்சேரி விளையாட்டு அணை அமைப்பாளர் அன்பு தம்பி திரு ஜேம்ஸ் ராஜா* அவர்களின் மனிதநேயத்தை அமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பாராட்டுகிறோம் ...               இவரைப் போன்று நமது அமைப்பில் உள்ள பலரும் பல்வேறு மனிதநேய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் ... தக்க நேரத்தில் இவர்களின் மனிதநேய செயல்பாடுகளுக்கு அமைப்பு உரிய கௌரவளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! அமைப்பு உள்ள ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு அதை பதிவு செய்யப்படுகிறார்கள் ... தங்களின் செயல்பாடு ஏற்ற முக்கியத்துவம் அமைப்பில் வழங்கப்படும் என்பதை அமைப்பின் தலைமையக தலைமை நிர்வாகிகள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் ...

*மீண்டும் ஒருமுறை திரு ஜேம்ஸ் ராஜா அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!*

*~தலைவர், NSWF*