Monday, December 2, 2024

*NSWF செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் (24.11.2024)*

*NSWF செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் (24.11.2024)*

NSWF செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் கடந்த 24/11/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட  துணை பொருளாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டம் தொடக்கத்தில் 5/11/2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக மறைந்த அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிளை தலைவர் திரு. ராஜகுரு அவர்களின் 9 வயது மகள் யாஷிகா அவர்களுக்கு மாவட்ட குழுவின் சார்பாக ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட குழுவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மக்கள் சேவைக்கு ஒத்துழைப்பு தந்து செயல்பட வேண்டும் மற்றும் 
அமைப்பின் 
வளர்ச்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையும்,
பொதுமக்கள் தங்களுடைய மனுவாக அளிக்கும் பட்சத்தில்அமைப்பின் சார்பாக தகுந்த அதிகாரியை சந்தித்து அவர்களின் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நமது குழுவின் சார்பாகவும், தேசியத் தலைமையின் சார்பாகவும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி 🙏🙏

*செங்கல்பட்டு மாவட்ட தலைவரின் முக்கிய அறிவிப்பு:* 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமது மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும்  அந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள், பழைய உறுப்பினர்கள், பழைய நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் மாவட்ட  குழு நிர்வாகிகளின் ஆலோசனைகள் கேட்டு கலந்து கொள்ளாதவர்களின் பொறுப்புக்கள் தேசிய தலைமையின் ஒப்புதலோடு மாற்றம் செய்யப்படும்🙏