Monday, December 2, 2024

*NSWF செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் (24.11.2024)*

*NSWF செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் (24.11.2024)*

NSWF செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் கடந்த 24/11/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட  துணை பொருளாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டம் தொடக்கத்தில் 5/11/2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக மறைந்த அமைப்பின் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிளை தலைவர் திரு. ராஜகுரு அவர்களின் 9 வயது மகள் யாஷிகா அவர்களுக்கு மாவட்ட குழுவின் சார்பாக ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட குழுவில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மக்கள் சேவைக்கு ஒத்துழைப்பு தந்து செயல்பட வேண்டும் மற்றும் 
அமைப்பின் 
வளர்ச்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையும்,
பொதுமக்கள் தங்களுடைய மனுவாக அளிக்கும் பட்சத்தில்அமைப்பின் சார்பாக தகுந்த அதிகாரியை சந்தித்து அவர்களின் குறையை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நமது குழுவின் சார்பாகவும், தேசியத் தலைமையின் சார்பாகவும், வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி 🙏🙏

*செங்கல்பட்டு மாவட்ட தலைவரின் முக்கிய அறிவிப்பு:* 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நமது மாவட்ட அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும்  அந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள், பழைய உறுப்பினர்கள், பழைய நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் மாவட்ட  குழு நிர்வாகிகளின் ஆலோசனைகள் கேட்டு கலந்து கொள்ளாதவர்களின் பொறுப்புக்கள் தேசிய தலைமையின் ஒப்புதலோடு மாற்றம் செய்யப்படும்🙏

Tuesday, November 26, 2024

*நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சிவகாசி உறுப்பினருக்கு உரிய நிவாரணம் சட்டபூர்வமாக பெற்று தரப்பட்டது (நாள்25.11.2024)*

*நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சிவகாசி உறுப்பினருக்கு உரிய நிவாரணம் சட்டபூர்வமாக பெற்று தரப்பட்டது (நாள்25.11.2024)*

கொங்கலாபுரம், சிவகாசி தாலுகாவை சேர்ந்த நமது அமைப்பின் உறுப்பினர் முத்துலட்சுமி (வயது:44) க/பெ முத்துவேல் பாண்டியன் என்பவர் 30.05.2024 அன்று தனது ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி அடித்து மானபங்கம் செய்த  நபர்கள் மீது கொடுத்த புகாரில் தனக்கு சிவகாசி நகர காவல் நிலையத்தில் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு சரியான நடவடிக்கை எடுக்க உதவ வேண்டி நமது அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் நேற்று (25.11.2024) தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அமைப்பின் சார்பாக நீதிபதிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது! உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பித்த SC&ST ஆணைய நீதிபதிகளுக்கு தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

Sunday, November 24, 2024

Missing a Good Human!

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,  மாவட்ட அரசு சுகாதாரத்துறை அதிகாரி அவர்களுக்கும் வணகக்கம்!

 மேற்கண்ட இந்த மருத்துவ சீட்டு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்-ல் உள்ள தனிநபர் நடத்தும் *கிரசன்ட் கிளினிக்* என்ற பெயரில் ஒரு மருத்துவமனை உள்ளது.

30/10/2024 அன்று செய்யூர் பகுதியைச் சார்ந்த ராஜகுரு அவர்களின் மகள் யாத்திகாவிற்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அந்தக் குழந்தை யாத்திரிக்காவை பரிசோதனை ஏதும் செய்யாமலேயே இவர்கள் கூறியதை வைத்து அந்த குழந்தைக்கு ஊசி போட்டு அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி மாத்திரையும் வழங்கியுள்ளனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர் ஆனால் இரண்டு நாட்களில் குழந்தை உடல்  நிலைமை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் அந்த மருத்துவரை அணுகி கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை குழந்தை காய்ச்சலால் அப்படி உள்ளது சரியாகிவிடும் என்று அப்போதும் பரிசோதிக்காமல் சில  ஆறுதலான வார்த்தைகளை கூறி அனுப்பி உள்ளனர்.

 ஆனால் குழந்தைக்கு உடல் மிகவும் பாதிக்கப்பட்டதால் குழந்தையின் பெற்றோர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் குழந்தை சிகிச்சை பலன் இல்லாமல் 05/11/2024 அன்று இறந்துவிட்டார்.  அதனை அறிந்ததும் எங்கள் NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கூறியது எங்கள் குழந்தையை முதலில் இந்த மருத்துவரிடம் காட்டியுள்ளோம் இந்த  மருத்துவர் சரியான பரிசோதனை செய்யவும் இல்லை குழந்தையின் நிலைமையை எங்களிடம் கூறவும் இல்லை என்று கூறினார்கள்.

 அவர்களிடம் விசாரணை செய்ததில் முதலில் கிரசென்ட் கிளினிக் மருத்துவமனையில் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறோம்... எனவே ஐயா அவர்கள் குழந்தை யாத்திகாவின்
 இறப்பிற்கு முக்கிய காரணமாக உள்ள கிரசன்ட் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரையும், யாத்திகா குழந்தையின் பெற்றோர்களையும் முறையாக விசாரணை செய்து மருத்துவர் மீதும், மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் நன்றி 🙏

Tuesday, November 19, 2024

போக்குவரத்து துறைக்கு தேசிய சமூக நல அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக கோரிக்கை!

*கடந்த 18/11/2024 திங்கட்கிழமை காலை  11 மணியலவில்  நமது NSWF அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வைத்துள்ள கோரிக்கை!*

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுராந்தகம் பணிமனை கிளை மேலாளர் (B.M)  அவர்களிடம் தரப்பட்ட மேற்கண்ட கோரிக்கை மனுவை நேரில் சென்று வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு.வேலு, மாவட்ட துணை பொருளாளர் திரு ஏஜேஸ், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபுராஜ் இவர்களுக்கும் மனுவை பெற்றுக் கொண்டு அதன் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தமிழ்நாடு போக்குவரத்து கழக மதுராந்தகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்! 

*~தலைவர்,தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*