Thursday, October 31, 2024

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பொதுமக்கள் அறிய வேண்டி *தேசிய சமூக நல அமைப்பின் மூலம் பகிரப்படுகிறது. நாள்: 31.10.2024*

தீபாவளி பற்றிய வரலாறு: ஒளிர்வின் பின்னணி

தீபாவளி, ஒளி, வெற்றி மற்றும் புது தொடக்கத்தின் பண்டிகை. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைக்கு பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் தீபாவளியின் முக்கியத்துவத்தை வெவ்வேறு கோணங்களில் விளக்குகிறது.

முக்கிய புராணக் கதைகள்

ராமர் திரும்பும் கதை: ராமர் ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுவதாக ஒரு கதை கூறுகிறது. ராமர் திரும்பிய மகிழ்ச்சியில் அயோத்தி மக்கள் தீபங்கள் ஏற்றி கொண்டாடினர்.

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த கதை: மற்றொரு கதை, கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளாக தீபாவளியைக் குறிப்பிடுகிறது. நரகாசுரன் மக்களை துன்பப்படுத்தியதால், கிருஷ்ணர் அவனை கொன்று மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

லட்சுமி தேவி பூமிக்கு வந்த நாள்: தீபாவளி நாளில் லட்சுமி தேவி பூமிக்கு வந்ததாகவும், இல்லத்தில் தீபம் ஏற்றி வைத்தால் அவர் வந்து வாழ்க்கையை செழிப்பாக்குவார் என்றும் நம்பப்படுகிறது.

சமண மதத்தில் தீபாவளி: சமண மதத்தில், தீபாவளி மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சீக்கிய மதத்தில் தீபாவளி: சீக்கிய மதத்தில், தீபாவளி குரு நானக் தேவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியின் பொதுவான அர்த்தங்கள்

ஒளி வெல்ல இருள்: தீபங்கள் ஏற்றுவதன் மூலம் இருளை விரட்டி ஒளியை வரவேற்பது தீபாவளியின் முக்கிய நோக்கம்.

புது தொடக்கம்: பழையவற்றை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

நன்றி: நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறும் நாள்.

குடும்ப ஒற்றுமை: குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் நாள்.

தீபாவளி கொண்டாட்டங்கள்

தீபங்கள் ஏற்றுதல்: இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி ஒளிரச் செய்வது.

பட்டாசு வெடித்தல்: மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடித்தல்.

புதிய துணி அணிதல்: புதிய துணி அணிந்து புது வாழ்க்கையை தொடங்குவது.

இனிப்புகள் பரிமாறுதல்: இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது.

தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, நமது வாழ்வில் ஒளி, வெற்றி மற்றும் புது தொடக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் ஒரு நாள்.
                                                  அனைவரும் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு தேசிய சமூக நல அமைப்பின் (NSWF)சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ... *அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐*

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Wednesday, October 30, 2024

செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை நிறைவேற்றம் 30.10.2024

*தேசிய சமூக அமைப்பு (NSWF) -இன் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை நிறைவேற்றம்! பதிவு நாள்:30/10/2024*

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், நெடுங்கள் கிராமம், நேதாஜி தெருவில் உள்ள மின்விளக்குகள் பல நாட்களாக  எரியாமல்  உள்ளதாகவும்,  அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும்
NSWF அமைப்பின் *நெடுங்கல் கிளை தலைவர்  திரு.ஏழுமலை* அவர்கள் நமது அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், 

 அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) அவர்களிடம் அமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. 

நமது கோரிக்கை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும் அந்த தெருவில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் சரி செய்துவிட்டனர்.

எங்களது கோரிக்கையை ஏற்று துரிதமாக நடவடிக்கை எடுத்த B.D.O. அவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேற்கண்ட பொது சேவையில் ஈடுபட்டு பொது மக்களின் தேவையை உரிய அதிகாரியிடன் தெரிவித்து அதனை பொதுமக்களுக்காக நிறைவேற்றிக் கொடுத்த நமது தேசிய சமூக நல அமைப்பின் *செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் திரு மு வேலு அவர்களுக்கும் மற்றும் மாவட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும்* இதயம் கனிந்த பாராட்டுக்கள்...

*~தேசிய தலைவர்,  NSWF*

*வெளியீடு: தலைமையகம், தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*

Monday, October 28, 2024

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!

*தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை!*

மனு
நாள் 28/10/2024

புகார்.
சாலை சீரமைத்தல் வேண்டிய பதிவு.

தேசிய
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி அவர்களுக்கு அன்பான வணக்கம்.

இதோ நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படங்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஆச்சிறுப்பாக்கம் ஒன்றியம் சென்னை To திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டது.

தொழுப்பேடு பஸ் ஸ்டாப் அருகில் இருசக்கர வாகனம் செல்லும் பாதை ஓரத்தில் சுமார் 5 இடங்களில் பெரிய பள்ளம் உள்ளது.

அந்த வழியில் செல்லும் இரு சக்கர வாகனங்கள்
பள்ளம் இருப்பது அறியாமல் இரவு நேரங்களில் பலர் கீழே விழுந்து  பலத்த காயமடைந்து உள்ளனர்.

அதில் ஒரு சிலர் இறந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்களின் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த பள்ளங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று

எங்கள் NSWF அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் திரு சிவனேசன்
மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு.வேலு, மாவட்ட இணைத் தலைவர் டாக்டர் திரு பாலசுப்ரமணியன், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்கள்....

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகிறோம்!

Friday, October 25, 2024

முக்கிய அறிவிப்பு!

தேசிய சமூகநல அமைப்பின்(NSWF) நிர்வாகிகள் மட்டும் உறுப்பினர்கள்  27.10.2024க்குள் புதுப்பிக்காதவர்கள்...... மாவட்டத் தலைவரின் அறிக்கை ஏற்று புதுப்பிக்காதவர்கள் மாவட்டத் தலைவர் முடிவுக்கு ஏற்ப நீக்கமோ, பதவி மாற்றமோ செய்யப்படும். மேலும் தகவல்களுக்கு உங்கள் மாவட்ட தலைவரை அணுகவும்

Thursday, October 24, 2024

NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை (நாள்:24.10.2024)

*NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை (நாள்:24.10.2024)*

அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அலுவலக அதிகாரி BDO அவர்களுக்கும் மற்றும் எலப்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கும் வணக்கம்.

 இந்த புகைப்படங்கள்  செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், எலப்பாக்கம் ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவில் எடுக்கப்பட்டது. 

இந்தத் தெரு பல ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக சிதலமடைந்து கிடக்கிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தண்ணீர் தேங்கி நிற்கும் நாட்களில் பள்ளம் இருப்பது தெரியவில்லை.

இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்
 விபத்துக்குள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும்  எனவே அந்த சாலையை சிமெண்ட் சாலையாக சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.

 எங்கள் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு வேலு, மாவட்ட இணைத் தலைவர்  டாக்டர் திரு பாலசுப்ரமணியன்,எலப்பாக்கம் கிளையில் உள்ள ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மேற்கண்ட பஞ்சாயத்து ஒன்றிய அலுவலர்களுக்கும் , பஞ்சாயத் தலைவர் அவர்களுக்கும் மேற்கண்ட பாதையை சிமென்ட் பாதையாக அமைத்து தர வேண்டுமென்று தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் .....