*NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கோரிக்கை (நாள்:24.10.2024)*
அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அலுவலக அதிகாரி BDO அவர்களுக்கும் மற்றும் எலப்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கும் வணக்கம்.
இந்த புகைப்படங்கள் செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், எலப்பாக்கம் ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவில் எடுக்கப்பட்டது.
இந்தத் தெரு பல ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக சிதலமடைந்து கிடக்கிறது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தண்ணீர் தேங்கி நிற்கும் நாட்களில் பள்ளம் இருப்பது தெரியவில்லை.
இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்
விபத்துக்குள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும் எனவே அந்த சாலையை சிமெண்ட் சாலையாக சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
எங்கள் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டாக்டர் மு வேலு, மாவட்ட இணைத் தலைவர் டாக்டர் திரு பாலசுப்ரமணியன்,எலப்பாக்கம் கிளையில் உள்ள ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மேற்கண்ட பஞ்சாயத்து ஒன்றிய அலுவலர்களுக்கும் , பஞ்சாயத் தலைவர் அவர்களுக்கும் மேற்கண்ட பாதையை சிமென்ட் பாதையாக அமைத்து தர வேண்டுமென்று தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் .....