Tuesday, March 1, 2016

அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம்
----------------------------------------------------------
கடந்த 31.01.2016 அன்று NSWF அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நிர்வாக சீரமைப்பு கூட்டம் விழுப்புரம் பாலமுருகன் கூட்ட மண்டபத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அமைப்பின் நிறுவன தலைவர் திரு ர.சிவநேசன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு ச.ஜெயகுமார்( நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மாநில செயலாளர்), திரு ஜெயவிருதகிரி (மாநில துணை  செயலாளர் ), திரு செல்லப்பன் (மாநில துணை செயலாளர் ), திரு ஸ்ரீனுவாசன் (மாநில செயற்குழு ), திரு ரவிச்சந்திரன்(மாநில கொள்கை பரப்பு  செயலாளர் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மண்டல, மாவட்ட, தொகுதி,ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட  பலவாறு பதவிகளை வகிக்கும் நிர்வாகிகளான திரு குமார், திரு ஐய்யப்பன், திரு சக்திவேல், திரு  திருமதி மாரியம்மாள், திருமதி சந்திரகலா, திரு பாபு ராம், திரு மகேந்திரன், திரு நாராயணன், திரு புருஷோத்தமன், திரு தனசேகர், திரு செல்வம், திரு முருகன், திரு ஜகதீஷ், திரு ராமதாஸ், திரு பழனி, திரு ஆனந்த், திரு நந்தா, திரு சுந்தரராமன், திரு முருகன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

(i) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த திரு குமார் அவர்கள் சென்னை மண்டல தலைமை அமைப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

(ii) அமைப்பில் 1) விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு சுப்பிரமணி, 2) விழுப்புரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை  செயலாளர் திரு ஹென்றி ஜோசப், 3) ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளர் திரு மணிகண்டன், 4) தி.நகர் நகர கிளை அமைப்பாளர் முரளிதரன் , 5) திருபோரூர் நகர கிளை அமைப்பாளர் சத்தியராஜ்    ஆகியோர்  பதவி பெற்ற பின்னரும் பல மாதங்களாக அமைப்பின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் பணியாற்றாததால் இன்று முதல் தங்கள் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு சாதாரண அடிப்படை உறுப்பினராக மாற்றப்பட்டனர்.
(iii) மேலும் இதுவரை செயல்படாத விழுப்புரம், சேலம், வேலூர், கடலூர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மேலும் சிலகாலம் அவகாசம் வழங்குவது என்றும், இதற்க்கு பின்னரும் செயல்படவில்லையெனில் அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

(iv) அமைப்பின் சார்பாக மாவட்டம் மாவட்டமாக  இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்துவது, வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது, மருத்துவ முகாம் நடத்துவது, யோகா பயிற்சி முகாம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

(V) அமைப்பின் சார்பாக மாவட்டம் தோறும் மாவட்ட மாநாடுகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு ஐயப்பன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  நன்றி கூறினார்.