Friday, September 13, 2024

சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

NSWF நடத்தும் ஓவிய போட்டி!

*NSWF TAMILNADU**நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone), கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!*

*NSWF TAMILNADU*
*நமது ஒவ்வொரு கைபேசியுலும் (Mobile phone),  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!*

1.அவசர உதவி அனைத்திற்கும் — 112

2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639

5.போலீஸ் SMS — 9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103

8.போலீஸ் — 100

9.தீயணைப்புத்துறை — 101

10.போக்குவரத்து விதிமீறல — 103

11.விபத்து — 100, 103

12. ஆம்புலன்ஸ் — 102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி – 1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098

15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

18.கடலோர பகுதி அவசர உதவி — 1093

19. ரத்த வங்கி அவசர உதவி — 1910

20.கண் வங்கி அவசர உதவி — 1919

21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS - 95000 99100

இந்த முக்கிய எண்களை அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு பகிர வேண்டி தேசிய சமுக நல அமைப்பு வேண்டி கேட்டுக்கொள்கிறது!

Thursday, September 12, 2024

தேசிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

https://www.instagram.com/p/C_0wfdlzXZu/?igsh=YXZnb3V1a242OWhq

*திண்டிவனம் நகராட்சி நிர்வாகத்திற்கு தேசிய சமூகநல அமைப்பின் (NSWF) கோரிக்கை கோரிக்கை மனு (நாள்:09.09.2024)....*



இந்த இந்த புகைப்படங்கள் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திண்டிவனம் to புதுச்சேரி செல்லும் சாலையில் மரக்காணம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள பைபாஸ் பாலத்திற்கு கீழே உள்ள கழிவு நீர் கால்வாய் மூடி உடைந்து சுரங்கப்பாதை போல் காட்சியளிக்கும் இந்த பள்ளம் மிகவும் ஆபத்தான பள்ளமாக உள்ளது. இந்த கால்வாயில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து பல பேருக்கு பலத்த காயப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர். எனவே பொது மக்களை காக்க திண்டிவனம் நகராட்சி அலுவலர் அவர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தரமான மூடி போட்டு  மூடினால் அந்த வழியே செல்லும் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நமது NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு வேலு மாவட்ட இணைத் தலைவர் டாக்டர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் *தேசிய சமூக நல அமைப்பின் (NSWF)* சார்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்! 🙏🙏🙏

#nswf #nswflegal #shivanesan #shivanesanranganathan #humanrighta #socialservice #anticorruption 

New Whatsapp channel

https://whatsapp.com/channel/0029VanuAPmEVccMaGrzFk23

Sunday, September 1, 2024

செங்கல்பட்டு மாவட்டம், நேமம் அத்திவாக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய சமூகநல அமைப்பால்(NSWF) கௌரவிக்கப்பபட்டனர்! ( நிகழ்வு: 29.08.2024, பதிவு: 30.08.2024)

*செங்கல்பட்டு மாவட்டம், நேமம் அத்திவாக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய சமூகநல அமைப்பால்(NSWF) கௌரவிக்கப்பபட்டனர்! ( நிகழ்வு: 29.08.2024, பதிவு: 30.08.2024)*

நேற்று 29/8/2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நமது *NSWF தேசிய சமூக நல அமைப்பின்* மனித உரிமை பிரிவின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், நேமம் அத்திவாக்கம் என்ற கிராமத்தில் உள்ள அரசு  ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைபெற்று முடிந்த நமது இந்தியாவின் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் நமது அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு அந்த மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து  மாணவர்களுக்கு திறன் சார்ந்த விருதுகளும், சான்றிதழ்களும், புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்ற பொருட்களும் மற்றும் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளும், சான்றிதழ்களும் NSWF அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் *செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு மு வேலு, மாவட்ட செயலாளர் டாக்டர் திரு வெங்கட கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திரு அல்லா பாஷா, துணை பொருளாளர் திரு ஏஜாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் திரு ஆறுமுகம்,  அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபுராஜ்* ஆகியோர்  கலந்துகொண்டு அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். 

 மாணவர்களை ஊக்குவித்த மேற்கண்ட நமது நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்,  பள்ளி மேலாண்மை குழு தலைவி அவர்களுக்கும், விழாவை முன்னிட்டு சிறப்பாக எடுத்து நடத்திய மாவட்ட தலைவர் திரு வேலு அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் *NSWF சர்வதேச தலைமையகம்* சார்பாக  தெரிவித்துக் கொள்கிறோம்.