Sunday, September 1, 2024

செங்கல்பட்டு மாவட்டம், நேமம் அத்திவாக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய சமூகநல அமைப்பால்(NSWF) கௌரவிக்கப்பபட்டனர்! ( நிகழ்வு: 29.08.2024, பதிவு: 30.08.2024)

*செங்கல்பட்டு மாவட்டம், நேமம் அத்திவாக்கம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேசிய சமூகநல அமைப்பால்(NSWF) கௌரவிக்கப்பபட்டனர்! ( நிகழ்வு: 29.08.2024, பதிவு: 30.08.2024)*

நேற்று 29/8/2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நமது *NSWF தேசிய சமூக நல அமைப்பின்* மனித உரிமை பிரிவின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், நேமம் அத்திவாக்கம் என்ற கிராமத்தில் உள்ள அரசு  ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைபெற்று முடிந்த நமது இந்தியாவின் 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் நமது அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டு அந்த மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து  மாணவர்களுக்கு திறன் சார்ந்த விருதுகளும், சான்றிதழ்களும், புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்ற பொருட்களும் மற்றும் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளும், சான்றிதழ்களும் NSWF அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் NSWF அமைப்பின் மனித உரிமை பிரிவின் *செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு மு வேலு, மாவட்ட செயலாளர் டாக்டர் திரு வெங்கட கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திரு அல்லா பாஷா, துணை பொருளாளர் திரு ஏஜாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் திரு ஆறுமுகம்,  அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திரு பிரபுராஜ்* ஆகியோர்  கலந்துகொண்டு அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். 

 மாணவர்களை ஊக்குவித்த மேற்கண்ட நமது நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும்,  பள்ளி மேலாண்மை குழு தலைவி அவர்களுக்கும், விழாவை முன்னிட்டு சிறப்பாக எடுத்து நடத்திய மாவட்ட தலைவர் திரு வேலு அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் *NSWF சர்வதேச தலைமையகம்* சார்பாக  தெரிவித்துக் கொள்கிறோம்.