Wednesday, August 13, 2025

செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக வெளியிடப்படும் அழைப்பிதழ்!*

*டாக்டர் M. வேலு, மாவட்டத் தலைவர், NSWF செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக வெளியிடப்படும் அழைப்பிதழ்!*

*தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) செங்கல்பட்டு மாவட்டக் கிளை, சார்பாக நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!*

நிகழ்வுகள்:

 *தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு:*

   *நாள்:* 15/8/2025, வெள்ளிக்கிழமை

   *நேரம்:* காலை 7:30 மணி

   *இடம்:* NSWF மாவட்ட அலுவலகம், அச்சரபாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

 *விருதுகள் வழங்கும் விழா:*

   நாள்: 15/8/2025, வெள்ளிக்கிழமை

   *நேரம்:* காலை 8:30 மணி

   *இடம்:* V.E.P. அரங்கம், சர்வ சேவா அலுவலகம், அச்சரப்பாக்கம், மெயின் ரோடு, காந்தி பஸ் ஸ்டாண்ட் அருகில்

*சிறப்பு விருந்தினர்:*

நமது அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆர். சிவனேசன் அவர்கள் கலந்துகொண்டு, பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் விருதுகளையும் பரிசுகளையும் வழங்க இருக்கிறார்.
இந்த விழாவுக்கு, அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
*டாக்டர் M. வேலு*,
மாவட்டத் தலைவர்,
NSWF, செங்கல்பட்டு.

Sunday, August 10, 2025

சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து செங்கல்பட்டு மாவட்டம் NSWF குழு ஆலோசனை கூட்டம்!

*NSWF தேசிய சமூக நல அமைப்பின் சார்பில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!*


செங்கல்பட்டு: வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா ஏற்பாடுகள் குறித்து, NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமைப் பிரிவின் செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3/8/2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு குழுத் தலைவர் *திரு. சுந்தரம் ஐயா* தலைமை தாங்கினார். நகரத் தலைவர் *திரு. லோகநாதன்*, மாவட்டச் செயலாளர் *திரு. வெங்கடகிருஷ்ணன்*, மாவட்டப் பொருளாளர் *திரு. அல்லா பாஷா*, துணைப் பொருளாளர் *திரு. ஏஜாஸ்* மற்றும் மாவட்டத் தலைவர் *டாக்டர் திரு. மு. வேலு* உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.


விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

 அதன்படி, விழாவின் வரவேற்பாளர்களாக மாவட்டச் செயலாளர் திரு. வெங்கடகிருஷ்ணன் மற்றும் துணைச் செயலாளர் திரு. பிரபாகரன் ஆகியோர் செயல்படுவார்கள்.


விழாவிற்கு வருகை தருபவர்களின் ஆவணங்களைச் சேகரிக்கும் பொறுப்பை மாவட்டத் துணைப் பொருளாளர் திரு. ஏஜாஸ் மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. பிரபுராஜ் ஆகியோர் ஏற்றுள்ளனர்.


காலை உணவு வழங்கும் பொறுப்பு, மாவட்டப் பொருளாளர் திரு. அல்லா பாஷா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் திரு. ஆறுமுகம், மாவட்டத் தொண்டர் அணி துணைத் தலைவர் திரு. முரளிதரன், சித்தாமூர் ஒன்றியத் தலைவர் திரு. கிருஷ்ணன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில், விழா ஏற்பாடுகளை சிறப்பாக நடத்துவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.