Wednesday, April 13, 2016

விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

முக்கிய அறிவிப்பு: NSWF - LEGAL AWARENESS DIVISION விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக வழக்கறிஞர் திரு. K.D.ராஜாராம் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ID NO: VM00382 அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்டவருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Tuesday, April 12, 2016

முக்கிய அறிவிப்பு

உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை உண்மையானதுதானா? என்பதை தங்களுடைய உறுப்பினர் எண்ணை www.nswflegal.com என்ற இணையதளத்தில் Type செய்து தெரிந்து கொள்ளளாம். போலியான அட்டையை பயன்படுத்தினால் சிறைசெல்வது உறுதி.  தயவு செய்து ஒத்துழைக்கவும்
 2 வாரங்களில் நமது www.nswflegal.com பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்று அறிவிக்கப்படுகிறது

Monday, March 28, 2016

விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்:





இன்று (27.03.2016) மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட என்.எஸ்.டபுள்யு.எப் (NSWF) நிர்வாகிகள் கூட்டம்,  விழுப்புரம்-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள K.R. பிளாசா, விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நிறுவனர் & தலைவர் திரு.சிவனேசன் தலைமை வகித்தார்.
புதுவை மாநில சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் திரு.உத்திராடம்,  மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் திரு.ரவிச்சந்திரன், மாநில துணைச்செயலாளர்கள் திரு.ஜெயவிருதகிரி, திரு.செல்லப்பன், மாநில இணைச்செயலாளர் திரு.வெங்கடேசன், கடலூர் மண்டல துணை அமைப்பாளர் திரு.சக்திவேல், விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு.அய்யப்பன், சட்ட ஆலோசகர் திரு.துரைராஜ், விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் (i)கிளைகள் தோரும் கூட்டங்கள் நடத்துவது, (ii)தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துவது, (iii)அமைப்பின் நிதிநிலையை உயர்த்துவது, (iv)கிளைகள்தோரும் இலவச சட்ட பயிற்சி முகாம் நடத்துவது,  (v) அமைப்பில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sunday, March 27, 2016

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு சுனாமிகுடியிறுப்பு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி


சென்னை மண்டல NSWF நிர்வாகிகள் கூட்டம்

கடந்த 13.03.2016 அன்று நமது அமைப்பின் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை, கீழ்கட்டளை,மேடவாக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அம்பிகை மினி ஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைமை அமைப்பாளர் திரு.குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாநில செயலர் திரு.ஜெயக்குமார், மாநில துணை செயலர் திரு.செல்லப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்த கொண்டனர். சென்னை மண்டலத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும்,  நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சென்னை மண்டலத்தில் தலைசிறந்த மருத்துவர்களைக்கொண்டு நமது NSWF அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.














Saturday, March 26, 2016

NSWF LEADERS MEETING MARCH -2016

NSWF LEADERS MEETING:

DATE: 27.03.2016, SUNDAY, 03.00 PM.
PLACE: Sri Balamurugan Residency, New bus stop opposite,  villupuram. Inform to everyone, We invites all