Wednesday, November 23, 2016

முதியோர் உதவித்தொகைகள்

                        22.11.2016, நமது தலைவர் திரு.சிவநேசன் அவர்கள் முயற்சியால் கடந்த ஆறு மாதங்களாக வராமல் நின்றுபோன முதியோர் உதவித்தொகைகள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பின்வருபவர்களுக்கு அரசால் மீண்டடும்  வழங்கப்பட்டது.
1. வேணு
2. பாக்கியம்
3. தனுசு
4. பவுனம்பாள்
5. ராணி
6. ராஜவேனி
7. யசோதா

- P.G.Pavani, M.A., B.L., Addvocate . NSWF General Secretary

Tuesday, September 27, 2016

மகாராஷ்டிரா மாநில புதிய நிர்வாகிகள்

மகாராஷ்டிரா மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்

Sunday, September 18, 2016

சந்திப்பு

நமது NSWF அமைப்பின் தலைவர் உயர்திரு சிவநேசன் அவர்களுடன் இன்று 18.09.2016 நண்பகல் 3 மணியளவில்  பீப்பிள் டுடே மாத இதழின் திரு சத்தியநாராயணன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிக்கையாளர் திரு செல்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசினர். நமது அமைப்பின் செய்தியை வெளியிட்ட பீப்பிள் டுடே பத்திரிக்கைக்கு நமது தலைவர் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. "ஒஜல்" மாத இதழின் ஆசிரியர் திரு ரா.சி.குமார் அவர்களை மஹாராஷ்டிரா மாநில தலைமை அமைப்பாளராக தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் செயலாளர் பவானி, சிவகுமார், தமிழ்க்குடிமகன், கிருஷ்ணவேணி, மகேந்திரன், சக்திவேல் உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

Friday, September 16, 2016

முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

நமது இயக்கத்தின் ஒவ்வொரு நிர்வாகியும், உறுப்பினர்களும் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற பாடுபட வேண்டும்.
~ தலைவர்