Monday, May 18, 2026

*​செங்கல்பட்டு மாவட்ட குழுவின் முக்கிய அறிவிப்பு**​நாள்:* 18.05.2026

*தேசிய சமூக நல அமைப்பு (NSWF)*

*​செங்கல்பட்டு மாவட்ட குழுவின் முக்கிய அறிவிப்பு*

*​நாள்:* 18.05.2026

அன்பான NSWF செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

​நமது செங்கல்பட்டு மாவட்ட குழுவின் செயல்பாடுகள் மற்றும் அவசர மாற்றங்கள் குறித்த முக்கிய விபரங்களை உங்கள் அனைவருக்கும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

*​1. நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி தற்காலிக நிறுத்தம்:*

​நேற்று (17.05.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நமது மாவட்ட அலுவலகத்தில் நடைபெறவிருந்த "நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி", வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காலநிலை நிலவியதன் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

​2. *மாலை ஆலோசனைக் கூட்டம் காலையிலேயே நடத்தப்பட்டதற்கான காரணம்:*

​நேற்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம், நேற்று காலையிலேயே (10 மணிக்கு) அவசரமாக நடத்தப்பட்டது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:

​தஞ்சை மாவட்ட பொதுசெயலாளர் இல்ல சுப நிகழ்ச்சி: இன்று (18.05.2026, திங்கள்) நமது அமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட பொது செயலாளர் திரு. மணிகண்டன் அவர்களின் இல்லத்தில் சுபநிகழ்ச்சி (வளையகாப்பு) நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள நமது குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

*​தேசிய தலைமையின் ஆணை:* நமது அமைப்பின் மதிப்பிற்குரிய தேசிய தலைவர் அவர்கள், இந்த சுபநிகழ்ச்சியில் நம் செங்கல்பட்டு மாவட்ட குழுவினர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், அங்கு நடக்கும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் நம்மை சிறப்பு விருந்தினராகவும் அழைத்துள்ளனர்.


*​⚠️ நிர்வாகிகள் பொறுத்தறுளுதல்:* தேசிய தலைமையின் அவசர ஆணைக்கிணங்க இந்த கூட்டம் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், சில நிர்வாகிகளுக்கு உரிய நேரத்தில் முன்தகவல் தர இயலவில்லை. இதற்காக மாவட்ட குழுவின் சார்பில் எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் சூழ்நிலையை உணர்ந்து அனைவரும் பொறுத்தருளுமாறு வேண்டுகிறோம்.

*​3. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு (விருது வழங்கும் விழா மாற்றம்):*

​நமது செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும் *"சிறப்பு விருதுகள் வழங்கும் விழா"* குறித்து நேற்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

​வழக்கமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெறும் இவ்விழா, இந்த ஆண்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் வரவிருக்கும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாற்றியமைக்கப்பட்டு நடத்தப்படும்.

*​நிர்வாகிகளுக்கான அன்பான வேண்டுகோள் (நிதிப் பங்களிப்பு):*

​இந்த தேசப்பொது விழா தள்ளி வைக்கப்பட்டதற்குக் முதன்மை காரணம் நம்மிடம் உள்ள நிதி பற்றாக்குறை ஆகும்.

​📢 அமைப்பின் நிகழ்ச்சிகள் எவ்வித தொய்வும் இன்றி சிறப்பாக நடைபெற, உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர சந்தா தொகையை (Subscription Fees) தவறாமல் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய நிதி ஒத்துழைப்பு மட்டுமே நமது அமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

​நமது அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்கள் சேவைக்கும் எப்போதும் போல அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

​நன்றி!

**இப்படிக்கு,*
 
*NSWF செங்கல்பட்டு மாவட்ட குழு*