Sunday, January 1, 2017

R.T.I act for Anniyur Toilet Matter

தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005,  
For Anniyur Toilet Matters

Appeal


மேற்கண்ட நமது மேல்முறையீட்டு மனுவிற்கு கீழ்கண்ட பதில்கள் இன்று பொது தகவல் அலுவலர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி . ஊ), ஊராட்சி ஒன்றியம், காணை. மூலம் வழங்க பட்டுள்ளது. மேற்கண்ட பதில்கள் முழுமையின்றி தகவல் மறுக்கும் வகையில் பதில்கள் தரப்பட்டுள்ளது. மேலும் நமக்கு முதல் தகவல் கோரும் மனுவில் கொடுத்திருந்த 2015-2016 தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இரண்டு முறை ஒரே நபருக்கு கொடுக்கப்பட்டதை மேல்முறையீட்டு மனுவில் நாம் சுட்டிக்காட்டியதால் தற்பொழுது நமக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் மேற்கண்ட இரண்டு நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு வெவ்வேறு பட்டியல் வழங்கி நம்மை குழப்பி தப்பிக்க நினைப்பதுபோல்  உள்ளது இந்த பதில். இது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் பிரிவு 18(1)(d) ன் படி இழப்பீடு மற்றும் பொய்யான தகவல் வழங்கியவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றம். 

இது இத்துடன் முடியவில்லை முழுமையாக விலாசத்துடன் வழங்காமல் வெறும் பெயரையும் தந்தை பெயரைமும் மட்டும் வழங்கி பல்லாயிரம் மக்கள் வாழும் ஊரில் கண்டுபிடிக்காமல் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு தகவல் மறுப்பதாக நாம் நினைப்பதால் அடுத்து மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு பிரிவு 19(3) ன் படி செய்யப்படும். தேவை ஏற்பட்டால் புகார், போராட்டம், நீதிமன்ற வழக்கு என்று அடுத்த கட்டத்தை எட்டுவது தொடர்பாகவும் ஆலோசனையில் உள்ளோம் என்பதை நமது NSWF தோழர்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன்.