Wednesday, August 30, 2017

Kerala State General Secretary selected!

Mr Maheshkumar S/o Madhavan Nair from koottilangudi area of kerala state have been selected for Kerala State General Secretary for NSWF - HUMAN RIGHTS DIVISION


Monday, August 28, 2017

NSWF சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

NSWF சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் 27.08.2017 அன்று காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது. இக்கூட்டல் நிறுவனர் தலைவர் உயர்திரு ர.சிவனேசன் உள்பட முக்கிய நிர்வாகிகள், சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.






Sunday, August 27, 2017

முக்கிய அறிவிப்பு

கூட்டத்தில் கலந்துகொள்ளாக மிக Busy லீடர்கள் 2 நாட்களில் உங்கள் அடையாள அட்டையை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் வெட்டி பந்தா செய்ய நாங்கள் வேறு ஆட்கள் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் உங்களுக்கு வெட்டி பொறுப்பு வழங்கி NSWF அமைப்பு நடத்தவில்லை.  வாய்சவடால் வீரர்கள் அமைப்பிற்கு தேவையில்லை. நீங்கள் அடையாள அட்டையை அனுப்பி வைக்க வில்லையெனில் நானே உங்களை நீக்கி நமது OFFICIAL WEB SITE-ல் www.nswflegal.com அறிவிப்பேன்.

தலைவர் NSWF

Tuesday, August 22, 2017

விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் கிராமத்தில் ஆங்காங்கே தேங்கிக்கிடந்த மழைநீரால் தொற்றுநோய் ஏற்ப்படக்கூடிய சூழல் நிலவியது. இந்நிலையில் தேங்கிக்கிடக்கும் நீர்நிலைக

Monday, August 21, 2017

முக்கிய கூட்டம்

தமிழ் நாடு அனைத்து NSWF நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

   நமது NSWF அமைப்பின் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதால் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மிக பணிவன்புடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.  கலந்து கொள்ளவில்லை என்றால் தக்க நடவடிக்கை  எடுக்கப்படும்

இடம் :நமது NSWF அலுவலகம்
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே.
நாள்: 27.08.2017 ஞாயிற்றுகிழமை
நேரம் : காலை 11.00am

குறிப்பு: கலந்துகொள்ளாத நிர்வாகிகள் உறுப்பினராக மாற்றப்படுவர்

Thursday, August 17, 2017

சென்னை மண்டலம் சார்பாக காவல்துறை இயக்குனரிடம் புகார் மனு

போலீஸ் மரகதம் மீது நடவடிக்கை எடுக்க கோரி NSWF சென்னை மண்டலம் சார்பாக காவல்துறை இயக்குனரிடம் சென்னை மண்டல நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் ஆனந்த் புகார் மனு


Tuesday, August 15, 2017

கோரிக்கையை நிறைவேற்றிய இந்து அறநிலைத்துறைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

நீண்ட போராட்டத்திற்குபின் பலநூறு வருடங்களுக்குப்பின் அருள்மிகு அன்னியூர் திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ வள்ளி,ஸ்ரீ தெய்வானை சமேதராக ஸ்ரீ முருகன் உற்சவராக இன்று (15.08.2017) வீதியுலா வரவுள்ளார். இனி ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் வீதியுலா நடத்த இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. ஒத்துழைப்பு வழங்கிய ஊர்பொதுமக்களுக்கும், நாட்டாண்மைகளுக்கும், வழிகாட்டிய சகோதரர்களுக்கும்,  அனுமதியளித்த இந்து அறநிலையத்துறைக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

http://www.nswflegal.com/2017/08/nswf.html?m=1








Sunday, August 13, 2017

ஒரு ஏழையை நல்லடக்கம் செய்ய உதவிய காவல்துறைக்கும், விக்கிரவாண்டி ஜமாத் தலைவருக்கும், தோழர்களுக்கும் NSWF சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

அந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த திரு முனில்பாஷா (வயது 45) கடந்த 11.08.2017 அன்று பயணத்தின் போது விழுப்புரம் ரயில்வே நடைமேடையில் திடீர் மாரடைப்பால்   மரணமடைந்தார். இவருடன் பயணம் செய்த இவரது மனைவி வறுமையின் காரணமாக கையில் பணமின்றி,  சடலத்தை தன் சொந்த ஊருக்கும் கொண்டுசெல்ல வழியின்றி தவித்தார். நமது NSWF திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி திரு நந்தக்குமார் மற்றும் உறுப்புனர்    ரியாஸ்பாய் மூலம் நமக்கு தெரியவந்தது. வளவனூர் ஜமாத் தோழர்களின் வழிகாட்டலுடன் விக்கிரவாண்டி ஜமாத் உதவியுடனும், காவல்துறை உதவியுடனும் அன்று மாலையே விக்கிரவாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரு ஏழையை நல்லடக்கம் செய்ய உதவிய காவல்துறைக்கும், விக்கிரவாண்டி ஜமாத் தலைவருக்கும் மேற்கண்ட தோழர்களுக்கும் NSWF சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

~ ர.சிவனேசன்
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் (NSWF)

Saturday, August 12, 2017

இந்து அறநிலையத்துறையிடம் NSWF மனு

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேலாக எழுந்தருளிக்கொண்டிருக்கும் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீராமநாதீஸ்வர் ஆலயத்தில்  வருகின்ற 15.08.2017 அன்று ஆடிகிருத்திகைவிழாவில் இரவு வீதியுலாவிற்கு ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை அமையார்களுடன் சமேதராக வலம்வர மேற்கண்ட மூவரின் சிலையையும் விதியுலாவிற்கு வழங்க இந்து அறநிலையத்துறை விழுப்புரம் ஆய்வாளர் மறுத்ததால்,  மேற்கண்ட சிலைகளை வீதியு லாவிற்கு  வழங்கவேண்டி இந்து அறநிலையத்துறை விழுப்புரம் இணை ஆணையரிடம் நமது NSWF சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 9, 2017

அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை

முக்கிய அறிவிப்பு!!!

நமது NSWF மீது தொடர்ந்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர்கள் கண்டறியப்பட்டனர்.
கடந்த 22.07.2017 அன்று SP யிடம் நூற்றுக்கணக்கான NSWF உறுப்பினர்கள் ஒன்று திரண்டு புகார் மனு  அளித்தனர். விழுப்புரம் DSP புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் பல நாட்கள் கடந்த பின்னரும் முக்கிய சதிகாரி மரகதம் ஒரு போலிஸ் என்பதால் அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வருகின்ற திங்கட்கிழமை (07.08.2017) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளதால் அனைவரும் 07.08.2017 அன்று திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.











Wednesday, August 2, 2017

ஆட்கள் தேவை

முக்கிய அறிவிப்பு:
நமது NSWF விழுப்புரம் அலுவலகத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. நல்ல சம்பளம், பயணப்படி உண்டு.
குறைந்தது +2 முடித்திருக்க வேண்டும்,  பட்டதாரிகளுக்கு முன்னுரிமையுண்டு. நன்கு பேசும் திறனும், கடிதம் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.2 WHEELER வைத்திருந்தால் நன்று. கார் ஒட்டும் அனுபவம் இருந்தால் மிக நன்று.

தொடர்புக்கு: 9790360354