Sunday, May 28, 2017

வெள்ளேரிப்பட்டு கிளை அமைப்பாளர் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா, வெள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திரு. அண்ணாதுரை த/பெ சிவராமன் அவர்கள் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின் வெள்ளேரிப்பட்டு கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.


அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைவரின் வேண்டுகோள் !!!

அன்புக்குரிய நிர்வாகிகளே மற்றும் உறுப்பினர் தோழர்களே. நமது அமைப்பை சிவநேசனாகிய நான் ஒருவன் மட்டுமே பலப்படுத்திவிட முடியாது. இரவு 2.51க்கு தூக்க கலக்கத்துடன் இந்த எனது மன குமுறலை உங்களிடம் வெளிப்படுத்துகின்றேன்.  நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகிய உங்கள் அனைவரின் ஒத்துழைய்ப்பு, உண்மையான அக்கறை, நமது அமைப்பை வளர்க்க வேண்டும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வெறியும், பற்றும் உங்கள் அனைவரிடமும் இருந்தால் மட்டுமே நாம் எதையும் சாதிக்க முடியும். ஆனால் உங்களில் எந்தனை பேர் அதனை செய்தீர்கள்??? NSWF அடையாள அட்டையை மக்களுக்கு நன்மை செய்ய பயன்படியுத்தாமல், அரசு அதிகாரிகளை மிரட்டவே பயன்படுத்துகின்றீர்கள். உங்களில் எத்தனை பேர் இதுவரை குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது சேர்த்துளீர்கள்? என்று சொல்ல முடியுமா? உங்களின் பதவியை ரெனீவல் செய்யும் போது மிகவும் வெட்கப்படுகிறேன். கடந்த முறை உங்களுக்கு பதவியை போடும்போது பார்த்த நான் இப்போதுதான் ரெனீவலில் உங்கள் முகத்தை காண்கின்றேன். நீங்கள் அடையாள அட்டையை உங்களின் பலத்திற்க்காக மட்டுமே பயன்படுத்துகின்றீர்களே தவிர நமது அமைப்பை பலப்படுத்த ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. சென்னை அணியை எடுத்துக்கொண்டால்  கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை பல நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தும் குறைந்த பட்சம் 50 உறுப்பினர்களை கூட சேர்க்கவில்லை . அப்படியே உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை அனுப்பினாலும் அதற்க்கான கட்டணத்தை இதுவரை முழுதாகவோ அல்லது மொத்தமானவவோ அனுப்பியதே இல்லை. மேலும் பல மாதங்கள் உறுப்பினர் செக்கை விண்ணப்பங்களை தங்களுடனே வைத்திருந்து விட்டு. உறுப்பினர்கள் கட்டணம் செலுத்தியும்,  கட்டணம் எதுவும் அனுப்பாமல் அமைப்பை நிர்பந்த படுத்தி இலவசமாக அடையாள அட்டை பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நேரடியாக வங்கியின் கணக்கு எண்ணில் பணத்தை செலுத்த சொன்னால், உறுப்பினர் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்தி விட்டனர். . இதனால் நமது அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக நிதி பற்றா குறையிலேயே உள்ளது. உங்களுக்கு பதவி அளிக்க பரிந்துரைத்த முக்கிய நிர்வாகிகளும் தமது கடமையை செய்வதில்லை , உங்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க அவர்களுக்கு நேரம் இல்லை. அப்புறம் எப்படி நமது அமைப்பு வளரும்??? சென்ற ஆண்டு சென்னை நிவாகிகள் நடத்திய மருத்துவ முகாமை தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. ஒரு நிர்வாகிகள் கூட்டம் கூட இதுவரை நடத்தி எனக்கு அறிக்கை அனுப்பவில்லை. கேட்டால் ஈகோ பிரச்சனையை முன்வைக்கின்றீர்கள். உங்களை நம்பினால் நமது அமைப்பை வளர்க்க இன்னும் பல யுகங்கள் தேவைப்படலாம். எனவே தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய நிர்வாகிகளும், மீண்டும் ரெனீவல் செய்துள்ள பழைய  நிவாகிகளும் 2 மாதங்களுக்குள் தங்களின் திறமையை நிரூபிக்கும் வண்ணம் புதிய உறுப்பினர் சேர்க்கை, உங்கள் பகுதியில் கிளை கூட்டம் நடத்தி உங்கள் தகுதியை நிரூபிக்கவேண்டும். இல்லையெனில் கட்டை வண்டியில் சவாரி செய்ய நமது அமைப்பு தயாராக இல்லை. எனவே உங்களை உறுப்பினர்களாக்கிவிட்டு புதிய ரத்தம் பாய்ச்சப்படும் என்று தெரிவித்துக்கொளகிறேன். உங்களுக்கு கட்டளையிட நான் உங்களுக்கு பணம் கொடுத்து வேலைக்காரர்களாக வைத்தில்லை.NSWF அமைப்பின் தலைவர் என்ற முறையில் எனது வேண்டுகோளை அன்பு வேண்டுகோளாக ஏற்று அமைப்பை பலப்படுத்த  வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவண்,

ர. சிவநேசன்,
நிறுவனர் தலைவர் NSWF
National Social Welfare Foundation

தமிழ்நாடு மாநில விசாரணை அணி அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சேலம் மாவட்டம், மேட்டூர் டேமை அடுத்த, புதுசம்பள்ளி பகுதியை சேர்ந்த திரு அசோக்குமார்  த/பெ கருணாமூர்த்தி அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் மனித உரிமைகள் பிரிவின் தமிழ்நாடு மாநில விசாரணை அணி அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சென்னை, போரூரை அடுத்த, மவுலிவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் த/பெ தியாகு அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் ஸ்ரீபெரும்புதூர் நகர கிளை அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

திருத்தணி நகர கிளை அமைப்பாளர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, கவரி ராஜபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் த/பெ சுப்பிரமணி அவர்கள் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் திருத்தணி நகர கிளை அமைப்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

NSWF - நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் தேசிய செயலாளர் மீண்டும் தேர்ந்தெடுப்பு!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த திரு ஜெயக்குமார் த/பெ சந்தானம் அவர்கள்  நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேஷனின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவின் தேசிய செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.

Saturday, May 27, 2017

விழுப்புரம் நகர கல்வி அணி அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் நகரை சேர்ந்த ஆசிரியர் திரு தியாகசுந்தர் த/பெ காத்தவராயன் அவர்கள் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின், விழுப்புரம் நகர கல்வி அணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.