தேசிய சமூகநல அமைப்பின் (NSWF) செங்கல்பட்டு மாவட்டக் குழுவின் மனித உரிமைகள் பிரிவின் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 6, 2025) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் சென்னை மண்டலம், மடிப்பாக்கம் கிளையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அமைப்பின் சட்டதிட்டங்கள், சேவைப் பணிகள், அமைப்பின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வரவிருக்கும் சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கான கல்விச் சேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
"கல்விக்கண் திறந்த காமராஜரைப் போல் இல்லாவிட்டாலும், நம்மால் இயன்றதை கல்வி கற்கும் மாணவச் செல்வங்களுக்குச் செய்வோம்" என்ற நோக்கத்துடன், இந்த அரும்பணியில் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தேசிய சமூகநல அமைப்பு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக, *மாவட்டத் தலைவர் திரு. டாக்டர். வேலு, மாவட்ட இணைத் தலைவர் திரு. டாக்டர். பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைப் பொருளாளர் திரு. ஏஜாஸ், இளைஞர் அணி துணைத் தலைவர் திரு. ஆறுமுகம், சித்தாமூர் ஒன்றியத் தலைவர் திரு. கிருஷ்ணன், நெற்குன்றம் கிளைத் தலைவர் திரு. முருகன், சென்னை மண்டலத் தலைவர் திரு. வெங்கடேசன், துணைத் தலைவர் திரு. பாலு* ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த *மண்டலச் செயலாளர் திரு. மணிகண்டன், துணைச் செயலாளர் திரு. சுப்பிரமணியன், இளைஞர் அணிச் செயலாளர் திரு. குமார், மடிப்பாக்கம் கிளைத் தலைவர் திரு. குருசாமி, துணைத் தலைவர் திரு. ஆதிலிங்கம்* ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.