*மாமனிதர் காமராஜர் பிறந்த நாள் - NSWF மாவட்ட அலுவலகத்தில் மரியாதை நிகழ்வு!*
செங்கல்பட்டு, ஜூலை 15, 2025 –
முன்னாள் தமிழக முதல்வர், கல்விக்கண் திறந்த மாமனிதர், உலகம் போற்றும் உத்தம தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் போது காமராஜர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டம், ஒன்றியம் மற்றும் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, NSWF *செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் டாக்டர் திருவேலு* அவர்கள், கலந்து கொண்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
*"இன்றைய தலைமுறைக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருந்தகை காமராஜரின் நினைவு நாளை நாம் பொருத்தமான முறையில் மரியாதையுடன் கொண்டாடுகிறோம்"* என அவர் கூறினார்.