*தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) கண்டன அறிக்கை*
*திகதி:* 03.07.2025
*இடம்:* சென்னை
*பொருள்: திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பாக கண்டனம் வெளியீடு*
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல்துறையின் விசாரணை நடவடிக்கையின் போது இளம் பாதுகாவலர் திரு. அஜித் குமார் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வானது ஒரு பெண் புகாரின் பின்னணியில், உரிய விசாரணை முறைவழிகளை மீறி இடம்பெற்றது என்பது மிகவும் கவலையளிக்கக்கூடிய விடயமாகும்.
அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப்பூர்வமாகவோ, மனித நெறிகளின்படி காவல்துறையினரால் ஒரு பொதுமகனிடம் நடத்தப்படவேண்டிய விசாரணை முறைகள் மீறப்பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது என்பது வரவேற்கத்தக்கது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியமைத்த அரசின் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு வழங்கிய நிவாரணங்களும் ஒரு அடிப்படை நியாயம் மட்டுமே என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
*தேசிய சமூக நல அமைப்பின்(NSWF) சார்பாக,*
திரு. அஜித் குமாரின் மரணத்திற்கு நீதியும்,
அவரது குடும்பத்துக்கு முழுமையான நிவாரணமும்,
மற்றும் இவ்வகை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய காவல்துறைக் கட்டுப்பாடுகளும்
உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வலியுறுத்தல்.
எதிர்பார்ப்புடன்,
*ர.சிவனேசன், தலைவர்*