Wednesday, June 28, 2017

தாவல் அறியும் உரிமை சட்டப்படி கோரிய தகவல்களை மழுப்பிய விழுப்புரம் மாவட்ட பதிவாளர் (நி)


மேற்கண்ட நாம் கோரிய தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவல பத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 


நமது மனு நாள் 12.05.2017-ல் கேட்ட தகவல் அளிக்காமல், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் தகவலை மழுப்பியும், மறைத்தும் உள்ளார் நமது விழுப்புரம் பொதுத்தகவல் அலுவலர்(ம), மாவட்ட பதிவாளர்(நி), விழுப்புரம். எல்லாவற்றிக்கும் மேலாக தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பற்றி நமக்கு பாடம் நடத்தியுள்ளார். ஐயா மாவட்ட பதிவாளரே..... அனைத்து சட்ட பிரிவுகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சட்டம் கற்று கொடுக்காமல், அவர்கள் கோரும் தகவலை அளித்தால் போதுமானது.....


எங்களுக்கு பாடம் நடத்தும் முன்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இந்த பிரிவுகள் 18(1)(a), 18(1)(b), 18(1)(c), 18(1)(d), 18(1)(e), 19(8), 20(1), 20(2) போன்ற பிரிவுகளை நன்கு படித்து மனதில் வைத்துக்கொண்டு பிறகு இதுபோன்று பாடம் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவன்,

ர. சிவநேசன், 
நிறுவனர் & தலைவர் NSWF,
நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)