Wednesday, May 24, 2017

O.A.P., NREGA பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய அன்னியூர் கார்ப்பரேஷன் வங்கிக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!


விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் கிராமத்திலுள்ள கார்பொரேஷன் வங்கியை சார்ந்து அன்னியூரை சுற்றி பல கிராம மக்கள் உள்ளனர். இவர்களின் ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]), அரசாங்க நலத்திட்ட உதவிகள் ஆகியவைகள் இந்த வங்கியின் மூலமாகவே பல கிராம மக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் நம்மை சந்தித்த பல கிராம முதியோர்கள் மற்றும் 100 நாள் வேலை செய்யவோர் பலர், "தங்களுக்கு வழங்கப்படும் மேற்கண்ட திட்டங்களுக்கான பணம் முழுமையாக அல்லது சுத்தமாக வழங்கப்படுவது இல்லை. மேற்கண்ட திட்டங்களுக்கான பணத்தை வழங்க மேற்கண்ட அன்னியூர் கார்ப்பரேஷன் வங்கி தனியார்களை பணியமர்த்தி உள்ளது. அவர்கள் சரியாக பணம் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்றும், தங்களின் கைரேகையை பெற்று தங்களின் வாங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடுகிறார்கள் என்றும் சந்தேகம் உள்ளதாகவும், மேலும் வயது முதிர்ந்த ஏழைகளான தங்களை அவர்கள் மரியாதையுடன் நடத்தாமல் ஏளனம் செய்து அவமான படுத்துவதாகவும், பல மாதங்களாக பணம் வரவில்லை என்று வங்கியில் கேட்டால் எங்கள் பகுதியிலுள்ள தாங்கள் பணியமர்த்தியுள்ள தனியார்கள் சொல்வதை ஒழுங்காக கேட்டு நடந்துகொள்ளுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு எந்த பணமும் வராமல் செய்து விடுவோம் என்று மிரட்டு கிறார்கள். இதனால் வயதான காலத்தில் செலவுக்கு கூட பணமின்றி தவிப்பதாக பல முதியோர் கூறியது பல நாட்களாக நமது மனதை நெருடிக்கொண்டே இருந்தது."
இந்நிலையில் இதே பிரச்னையுடன் நம்மை அணுகிய நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பின் சித்தேரி கிளை அமைப்பாளர் திரு ஜோசப் த/பெ பெரியநாயகம் மற்றும் சித்தேரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் "தங்களுக்கு தனியார் வேண்டாம், எங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு ATM கார்டு வாங்கி கொடுத்தது விடுங்கள் நாங்கள் அனைத்து ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]), அரசாங்க நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் வங்கியிலேயே பெற்றுக்கொள்கின்றோம். ATM இருப்பதால் தங்களால் வாக்கிக்கு சிரமம் இல்லை. மேலும் தனியார்கள் தலையீடும் இல்லாது எங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். எங்களுக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது எடுத்துக்கொள்வோம். எனவே ATM பெற்றுத்தாருங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதுவரை இப்பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று குழம்பி வந்த நமக்கு நமது சித்தேரி கிளை நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை பலரின் இப்பிரச்சினைக்கான சிறிதளவேனும் தீர்வாக நமக்கு தோன்றியதால், அனைத்து விதமனான வாங்கி கணக்கும் ATM கார்டு வாங்கி தருவது என்று முடிவெடுத்தோம்.
இந்நிலையில் கடந்த 19.05.2017 அன்று வங்கியை அணுகிய நாம் "அனைவருக்கும் வங்கியிலேயே பணம் கொடுக்கலாமே, ஏன் தனியார்களை பணியமர்த்தி உள்ளீர்கள்" என்று கேட்டதுக்கு வங்கியால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினார்கள். "சரி அப்படியானால் அனைவருக்கும் ATM கார்டு வாழ்குங்கள் அவர்கள் பண்ணத்தை ATM மெஷினில் எடுத்துக்கொள்வார்கள் உங்களுக்கும் பிரச்னை இருக்காது" என்று கூறியதும், நமது கோரிக்கையை நிராகரித்த மேற்கண்ட வங்கியின் அலுவலர் தினேஷ் " 500 ரூபாய் செலுத்து சேர்ந்துகொள்ளும் Savings Bank (SB) அக்கௌண்டுக்கு மட்டுமே ஏ.டி,எம். கார்டு வழங்குவோம் மற்ற அக்கௌண்டுகளுக்கு இல்லை என்றும் தவறான தகவலை வங்கியின் மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களின் அருகில் இருந்துகொண்டே கூறினார். இதனால் அதிர்ப்தியடைந்த நாம் இது Reserve Bank of India (RBI) விதியா என்று நாம் வினவியத்துக்கு ஆம் என்று கிராமத்திலுள்ளவர்களுக்கு என்ன தெரியப்போகிறது என்ற எண்ணத்தில் பதிலுரைத்தார்". இதனால் நாம் கார்பொரேஷன் வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். "அவர்கள் தாங்கள் அனைத்து விதமான தங்கள் வங்கி கணக்கிற்கும் ATM கொடுப்பது கட்டாயம், நீங்கள் திருச்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று மண்டல வங்கி தொடர்பு எண்ணனான 0431-2743600 என்ற என்னை கொடுத்தனர்".
பின்னர் நம்மையை தொடர்புகொண்ட திருச்சி மண்டல அலுவலர் திரு கிசோர் அவர்கள் முதலில் ATM இல்லை என்று மறுத்து பின்னர் தலைமை அலுவலகம் அனைவருக்கும், அனைத்து கணக்கிற்கும் ATM கொடுப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர் என்று கூறியதுடன், அன்னியூர் வங்கி அலுவலர் தினேஷிடம் நமது செல்பேசியை கொடுக்குமாறு கூறினார். இருவரும் பேசியபின், அன்னியூர் கார்பொரேஷன் வங்கி அலுவலர் திரு தினேஷும் ஏதோ பேசியபின் நமது அன்பிற்குரிய வங்கி மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களும் திரு தினேஷுடன் பேசினார். பின்னர் நம்மை அழைத்த வங்கி மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் நீங்கள் கோரும் அனைத்து வங்கி கணக்கிற்கும் ATM தருகின்றோம் என்று சம்மதம் தெரிவித்தார். மகிழிச்சியடைந்த நாம் அவருக்கு நன்றி தெரிவித்தோம். பின்னர் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். "சார் நான் சிவநேசன் NSWF அம்மைப்பின் தலைவர், ஏற்கனவே தங்களை ஒரு ஏழை இளைஞனின் தொழில் வளர்ச்சிக்கு தாட்கோ லோன் சம்பந்தமாக தங்களை அணுகி இருக்கின்றேன். தாங்களும் அதனை அவருக்கு கொடுத்து உதவி இருக்கின்றீர்கள் அதற்கும் மிக்க நன்றி" என்று கூறினேன். அதற்க்கு "ஆமாம் சார் சிவநேசனாலே எல்லாருக்கும் தலைவலிதான்" என்று சிரித்துக்கொன்டே கூறினார்.
குறிப்பு: மக்களே உங்களுக்கு தனியார்கள் உங்களின் ஓ.எ.பி.( முதியோர்/ விதவை/ ஊனமுற்றோர் உதவித்தொகை) மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்ட கூலி (National Rural Employment Guarantee Act, 2005 [NREGA]) ஆகியவற்றிக்கு கொடுக்கும் பணத்தின் மீது சந்தேகமும், அவர்கள் உங்களை நடத்தும் விதம் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கு எண்ணிற்கு ATM கார்டு பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு சந்தேகமும் வராது, உங்கள் பணமும் பத்திரமாக இருக்கும். நீங்கள் வேண்டும் பொழுது உங்கள் பணத்தை வங்கியின் ATM -இல் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் பிரச்சனைக்கு சிறிதளவு தீர்வு தரும் என்று நான் நம்புகின்றேன். மேலும் சில பிரச்சனைகளான, "வேலை செய்தும் 100 நாள் வேலை திட்ட பணம் வரவில்லை, தகுதி இருந்தும் ஓ.எ.பி. பணம் வரவில்லை" ஆகிய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF) அமைப்பு மூலமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட இந்த செயல்பாட்டிற்கு உதவிய கார்ப்பரேஷன் வங்கி தலைமை அலுவலகத்திற்கும், மண்டல அலுவலர் திரு கிசோர் அவர்களுக்கும், அன்னியூர் கிளை மேலாளர் திரு ஸ்ரீதர் அவர்களுக்கும், எனக்கு பக்கபலமாக செயல்பட்ட நமது சித்தேரி கிளை அமைப்பாளர் திரு ஜோசப் அவர்களுக்கும், கிளை செயலாளர் திரு அந்தோணி அவர்களுக்குக்கும், விழுப்புரம்மாவட்ட சமூக மேம்பாடு பிரிவு துணை செயலாளர் திருஇசையாஸ் அவர்களுக்கும், கிளை உறுப்பினர்கள் திரு அந்தோணிசாமி, திரு ஆண்ட்ருஸ் ராஜேந்திரன், திரு சார்லஸ், திரு ராஜு, திரு மகிமைநாதன், திரு செந்தாமரை கலியமூர்த்தி, திருமதி அல்பினா, திரு தியாக சுந்தர், திரு போஸ், திரு குழந்தை இயேசு, திரு ஜான் மெசேன்ரோ, திரு ஆல்பர்ட் பிலீஸ், திரு பிரிட்டோ ஆகியோருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
~சிவநேசன் ரங்கநாதன்,
நிறுவனர் & தலைவர்,
நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டேசன் (NSWF)